இப்படிக்கு இவர்கள்: விவசாயம் நேற்று, இன்று, நாளை

By செய்திப்பிரிவு

மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி விவசாயிகள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை என்பது கண்கூடு. கார்ப்பரேட் கண் கொண்டுதான் இந்த தொழிலையும் மத்திய-மாநில அரசுகள் பார்க்கின்றன. நமது நாட்டை மற்ற நாடுகளோடு ஒப்பிட முடியாது.

நீர்வளம், நிலவளம், மனித வளம் நிறைந்த நம் நாட்டில் மற்ற தொழில்கள் செழித்து விவசாயம் நலிந்தால், அதனால் எந்த பலனும் இல்லை. விவசாயம் அழிந்தால் நமது நாட்டில் முன்னேற்றமே இருக்காது. இத்தருணத்தில் ‘தி இந்து’வில் விவாயிகளின் நலனுக்காக “விவசாயம் -நேற்று, இன்று, நாளை” பகுதி வெளிவருவது பாராட்டிற்குரியது. வாசகர்களாகிய நாங்களும் இவ்விவாதத்தில் பங்கேற்போம்.

-அ.பட்டவராயன், திருச்செந்தூர்.

தேவை வேலைவாய்ப்புக் கணக்கு

ஜூன் 20-ல் வெளியான ‘வேலைவாய்ப்புக் கணக்கெடுப்பு: தாமதமானாலும் நல்ல முடிவு’ என்ற தலையங்கம் வாசித்தேன். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான தேர்விற்காக 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்கிறது அதற்கான இணையதளம். இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம் என்ற வாக்குறுதி அனைத்துத் தேர்தல்களிலும் அளிக்கப்படுகின்றன.

பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், திட்டமிட்ட வேலைவாய்ப்பினை உருவாக்க இந்தக் கணக்கெடுப்பு உதவும். 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில், ‘இளைஞர் அணி’ ஒன்றை அரசே உருவாக்கி தொகுப்பூதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அதனை இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாற்றியமைத்து, அமல்படுத்தலாமே?

-எஸ்.பரமசிவம், கணக்கு அலுவலர், மின்னஞ்சல் வழியாக…

பயனற்ற மாற்றம்

ஜூன் 27-ல் வெளியான, ‘2018 ஜனவரி முதல் நிதியாண்டு மாறுகிறது’ என்கிற தலைப்புச் செய்தி படித்தேன். எதற்காக இந்த மாற்றம்? மாதங்கள் மாறுவதனால் அரசின் வருவாய் ஏதும் கூடப்போகிறதா அல்லது இதனால் இவ்வளவு வருவாய் இழப்பு தவிர்க்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் இருக்கின்றனவா? நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கையில் அதனைத் தீர்க்காமல், காங்கிரஸ் ஆட்சியில் கடைப்பிடித்த அனைத்தையும் ஐந்து வருடங்களுக்குள் மாற்றியே தீர வேண்டும் என்று செயல்படுவது நல்ல ஆட்சிக்கு அழகல்ல.

-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

எழுத்தாளரின் அறம்

‘மோடிக்கு ஒட்டு கேட்டதற்காக ரொம்ப வருத்தப்படுகிறேன்’ எனச் சொல்கிறார் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் (ஜூன் 24). இங்கேதான் ஒரு எழுத்தாளரின் அறம் உயிர்த்து எழுகிறது. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மாயவலையில் இவர் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் பெருவாரியான பொதுமக்கள் விழுந்து மோடிக்கு அசுர பலத்துடன் வெற்றியைத் தேடித்தந்தனர். வட இந்தியாவில் இப்போதும் மக்கள் புரிந்துகொள்ளாமல் பாஜகவையே வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கின்றனர். நல்லவேளையாக மாநிலக் கட்சிகள் வலுவாக இருப்பதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இந்த ஆபத்து இல்லை. ஆனால் இங்கேயும் ஒரு சில ஊடகங்கள் திட்டமிட்டே மோடி அரசின் நிர்வாகத் தோல்விகளை, இன்ன பிற தவறுகளை சுட்டிக்காட்ட மறுக்கின்றன. ஒரு எழுத்தாளரின் நெஞ்சில் இருக்கும் அதே அறம்தானே அனைவரிடமும் இருக்க வேண்டும்.

-ரா.பிரசன்னா, ஜெய்ஹிந்துபுரம், மதுரை.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்