இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இளைஞர்களைச் செதுக்குவதற்குப் பதிலாக, சிதைக்கும் காரியங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக அரசு செயல்பட்டுவருவதைப் பட்டியலிட்டிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி.
உயர் கல்விக்கான கல்லூரிகளின் எண்ணிக்கையையும் திறன்மேம் பாட்டையும் உயர்த்தாததால், நம் மனித வளம் உலகத் தரத்தோடு ஒப்பிடும்போது, மோசமாக இருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது இக்கட்டுரை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பெண் கல்விக்காகவும், உடல் ஊனமுற்றோர் கல்வி உதவிபெறவும் செயல்படுத்திவரும் சில நல்ல திட்டங்களையும் கட்டுரை பாராட்டியுள்ளது. நிஜ இந்தியாவை ஸ்மிருதி இரானியும் மோடியும் உணர வேண்டிய தருணம் இது.
- கு.மா.பா.கபிலன், சென்னை.
*
வரலாறு கவனிக்கிறது!
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனி இருக்கை அமைப்பது தொடர்பாக ‘தி இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் பேசிய செய்தியைப் படித்தேன். மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இது தொடர்பாக தொடர்ந்து பேசியும் எழுதியும்வரும் நிலையில், ஆரம்ப நாளிலிருந்து ‘தி இந்து’ இந்த விஷயத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது தெரியவருகிறது.
தமிழ் வளர்ச்சி என்பது பல நூறு முனைகளில் செயல்பட வேண்டிய தளமாகும். அந்த முனைகளில் சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கெனத் தமிழுக்கு ஒரு தனி இருக்கையை உருவாக்குவதிலும் ஒன்றாகக் கருத முடியும்.
ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் இது. ‘தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய ‘தி இந்து’ இந்தக் காரியத்தில் தன்னை உத்வேகத்தோடு இணைத்துக்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இம்மாதிரியான முயற்சிகள் நடக்கும்போது அதைக் கண் கொண்டும் பாராமல் கடந்து போவதோ, ‘முதலில் தழிழை உள்ளூரில் காப்பாற்றுவோம்’ என்று சாக்கு சொல்லி ஒதுங்குவதோ பொறுப்பான செயல் ஆகாது. வரலாறு அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது!
- ஆ. தேவநாதன், கடலூர்.
*
பலமாகுமா இந்தியா?
பெரும்பாலானவர்களின் மனதில் புழுங்கிக் கிடக்கும் ஆசையை ‘நனவாகுமா கனவு?’ கட்டுரை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டுக்களில் தடகளத் துறையில் நாம் இதுவரை ஒரு பரிசைக்கூடத் தட்டி வராதது, 100 கோடிக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் ஒரு நாட்டுக்கு அவமானம் தான்!
காரணம், விளையாட்டுத் துறை ஊழல்கள் மட்டுமல்ல, நம்மிடம் பலமில்லை ஆப்பிரிக்க நாட்டவர்களோடு ஒப்பிடும்போது உடலியல் ரீதியான உடல்கட்டுமானத்தில் நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதை மறுக்க முடியுமா? நாளுக்கு நாள் மாறிவரும் நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்குக் காரணம்.
- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டிணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago