நெடுஞ்சாலையோரத்தில் மூடப்பட்ட மதுக் கடைகளைக் குடியிருப்புப் பகுதியில் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து, முழுமூச்சாகப் போராடும் பெண்கள் குறித்த செய்தியை வாசித்துப் பூரிப்படைந்தேன். பெண்களின் ஆதரவு இல்லாமல், மதுவை ஒழிக்கவே முடியாது என்பதற்கு என் குடும்பமே சான்று. குடிப் பழக்கம் உள்ளவரான என் தந்தை, ஆட்டுக்கு இலைதழை ஒடிப்பதற்காக மரம் ஏறியபோது, தவறி விழுந்து கை மணிக்கட்டு முறிந்துவிட்டது.
அந்தக் கையை வைத்துக்கொண்டு சாராயம் காய்ச்சிவிற்ற அவரை, “இந்தப் பாவம் நமக்கு வேண்டாம். அதற்கு மாட்டைக்கட்டிக்கூட அழலாம்” என்று கால்நடை வளர்ப்புக்கு மாற்றியவர் என் தாய். பிறர் குடியைக் கெடுக்கிற மதுக் கடைக்கு, நம் கடையை வாடகைக்குத் தரக் கூடாது என்ற எதிர்ப்பு ஒவ்வொரு குடும்பத்திலும் எழ வேண்டும். இப்படி குடும்பம், தெரு, கிராமம் ஒவ்வொன்றிலும் மதுவுக்கு எதிராக வைராக்கியத்துடன் போராடும் பெண்கள் இருந்தால், நிச்சயம் மதுவிலக்கு சாத்தியம்.
- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
தவறின்றித் தமிழ் எழுதுவோம்!
புள்ளி வைப்பதும் காற்புள்ளி இடுவதும் மிகச் சிறிய விஷயம்தான்... ஆனாலும் அது பலரும் தவறுசெய்யும் இடமாகிவிட்டது. அந்த இடர் களையும் வழிமுறைகளைச் சுருக்கமாகச் சுட்டியுள்ளீர்கள். தமிழ் விழா அழைப்பிதழ்களில்கூட முனைவர். பாஸ்கரன் என தவறாகவே அச்சாகிறது. முனைவர் பக்கத்தில் புள்ளி வைக்க வேண்டியதில்லை என்பதை முனைவர்களும் அறியாத நிலை பெரும் கவலை தருகிறது. தவறின்றித் தமிழ் எழுத உதவும் ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள்.
- கோ.மன்றவாணன், மின்னஞ்சல் வழியாக…
கடவுள் குறித்த பார்வை!
ஏப்ரல் 4 அன்று வெளியான, ‘ஆன்மிகவாதியா கத்தார்?’ படித்தேன். கடவுள் நம்பிக்கையுடைய பலரும் சமூகப் போராளிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. தான் செய்யும் மக்கள் பணி கடவுளுக்கு ஏற்புடையது என்ற தெளிவும் அவர்களுக்கு இருக்கும். ஆனால் அத்தகைய ஒருவர், தான் அதுவரை ஆற்றிவந்த புரட்சிகரச் செயல்பாடுகளுக்கு எதிரானதாகத் தன் கடவுள் குறித்த பார்வைகளையும் அது தொடர்பான வழிபாட்டு முறைகளையும் கொண்டுவந்து நிறுத்தும்போது, அவரை ஒரு குழப்பவாதியாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, பகுத்தறிவின் துணைகொண்டு, தர்க்கரீதியாக எதையும் பகுப்பாய்வு செய்பவரால் மட்டுமே எந்த ஒரு தத்துவத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடியும். தெளிவுடன் வெளிப்படுத்தவும் இயலும்.
- மருதம் செல்வா, திருப்பூர்.
புறக்கணிக்கலாமா?
எழுத்தாளர் சோ.தர்மன் எழுதியுள்ள ‘நிலத்துக்கும் விவசாயிக்குமான உறவை அறுத்துவிட்டது அரசு’ கட்டுரை இன்றைய பொருத்தப்பாடு கொண்டது மட்டுமல்லாமல், நீண்ட காலத் திட்டமிடலுக்கான புள்ளிகளையும் வழங்கியுள்ளது. இப்படித்தான், மரபு என்றதுமே இந்தக் காலத்துக்குச் சரிவராது என்று உடனே புறக்கணித்துக்கொண்டே எல்லா நல்லவற்றையும் இழந்துவிட்டோம். மக்களுக்கான அரசு என்பது நேரடியாக விவசாயிகளுக்கான அரசாக இருக்க வேண்டும். விவசாயத்தை அழித்துவிட்டு, எதிர்காலச் சமூகம் கணினி மென்பொருட்களைத்தான் மெல்லுமோ என்னவோ...?!
- முனைவர் சு.மாதவன், புதுக்கோட்டை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago