வியட்நாமில் கட்டாய ரத்த தானம் செய்தி (ஜனவரி 11) படித்தேன். ரத்தம் இன்றி உயிர் போகும் நிலை ஏற்படுவதால், ரத்தம் கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவார். ரத்ததானம் கொடுப்பது உணவு, உடை, பணம், நிலம் தானமாகக் கொடுப்பதைவிடச் சிறந்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 5 கோடி யூனிட் ரத்தம் தேவை. ஆனால், அதில் பாதிதான் இப்போது கிடைக்கிறது. இதில் பெரும்பகுதி கல்லூரி மாணவர்கள் கொடுப்பது. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சுமார் 60 கோடிக்கு மேல் உள்ளார்கள். வருடத்துக்கு ஒரு முறை இவர்கள் ரத்த தானம் செய்தாலே 60 கோடி யூனிட் கிடைத்துவிடும். நமது உடலில் சுமார் 10 யூனிட் ரத்தம் உள்ளது. அதில் ஒரு யூனிட் தானமாகத் தந்தால் போதும். ரத்த அளவு ஓரிரு நாட்களிலும் ரத்தத்தில் உள்ள அணுக்கள் ஓரிரு வாரத்திலும் ஊறிவிடும். விபத்து, பிரசவம், புற்று நோய்க்கு சிகிச்சை என நிறைய ரத்தம் தேவைப்படுவதால், அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வர வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
பணப் புழக்கம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகள் தீர்ந்தபாடில்லை. சாதாரண மக்கள் கையிருப்பாக அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை வைத்திருப்பார்கள். அதைப் பறித்துவிட்டால் பணப்புழக்கம் எப்படியிருக்கும்? என் பணம் வங்கியில், அதாவது அணைகளில் இருக்கும் தண்ணீர்போல் இருக்கலாம். ஆனால், என் வயல் வெளியில் அது வந்தால்தான் உபயோகம். என் வீட்டுப் பாத்திரங்களில் நிறைந்தால்தான் உபயோகம். நதிபோல் பணம் ஓடிக்கொண்டே இருந்தால்தான் பணத்துக்கு மதிப்பு. நதி ஓடும்போது சில இடங்களில் தேவையில்லாத அழுக்குக்குட்டைகளை உருவாக்கி விட்டதற்காக, நதியையே வற்றவிடுவது எப்படிச் சரியான பொருளாதாரமாகும்?
- விளதை சிவா, சென்னை.
ரொக்கமில்லாப் பரிவர்த்தனை
பெட்ரோல் பங்க்குகளில் பரிவர்த்தனைக் கட்டணத்தை நீக்கியிருப்பது (ஜன.10) வரவேற்கத்தக்கது. கடைகளிலும் மற்ற இடங்களிலும் ஸ்வைப் மெஷின் மூலம் வங்கி மற்றும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தும்போது, கடைக்காரர்களிடம் இருந்து வங்கிகள் 2 சதவீதத்தைப் பரிவர்த்தனைக் கட்டணமாக வசூலிக்கின்றன. அந்தத் தொகையைக் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் தானே வசூலிப்பார்கள்? பின் எப்படி பணமில்லாப் பரிவர்த்தனை வளரும்? தனியார் மருத்துவமனைகளிலும் கடன் அட்டை மூலம் மருத்துவம் அளிக்க மறுக்கிறார்கள். எனவே, பரிவர்த்தனைக் கட்டணத்தை முழுவதுமாக நீக்கினால்தான் ரொக்க மில்லாப் பரிவர்த்தனை வளரும்.
- கே.சிராஜுதீன், முசிறி.
இடதுசாரிக் கட்சிகளில் மட்டுமே ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது
திமுக, அதிமுக கட்சிகளின் நலன் கருதி, ‘கழகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்’ தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால், அவ்விரு கட்சிகளும் இதுவரை கடந்து வந்த பாதையைப் பரிசீலித்தால் அதற்கு வாய்ப்பே இல்லை எனலாம். இக்கட்சிகளின் கரிஷ்மா தலைவர்களின் சிந்தனைகள், அபிலாஷைகள் ஆகியவற்றைச் சுற்றியே இக்கட்சிகள் இயங்கிவருகின்றன. தற்போது திடீர் மாற்றம் வந்துவிடாது. உட்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவுக்குச் செயற்குழு, பொதுக்குழு என மாயமானாக வலம்வரும். அதோடு சரி. இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே அமைப்பு விதிகளின்படி கூட்டுத் தலை மையை உயர்த்திப் பிடிக்கின்றன. அக்கட்சிகளில்தான் அனைவரின் கருத்துகளும் கேட்கப்பட்டு, ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- சேகரன், பெரணமல்லூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago