இப்படிக்கு இவர்கள்: தேவை விழிப்புணர்வல்ல, அறவுணர்வு!

By செய்திப்பிரிவு

நீர்நிலைகளை அழிப்பதில் குறைந்தபட்சக் குற்றவுணர்வுகூட இல்லாமல் போனதே தமிழகத் தண்ணீர் தட்டுப்பாட்டு அவலங்களின் ஆரம்பம். ஒருபுறம், பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் வீடுகளாகின்றன. அடங்காத நிலப் பசிகொண்ட சுயநலவாதிகளுக்குக் கீழமைத்தனம் மிகுந்த அரசியல்வாதிகள் பெருவிருப்போடு உதவுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய நீதிமன்றங்களே நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டிருப்பது முரண்.

சவுதியின் கிழக்குப் பகுதியில் கழிவுநீரைச் சுத்திகரித்து, நதிகளாக்கி விவசாயத்தை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நாமோ நதிகளைக் கழிவுநீர் வடிகாலாக்கிவிட்டோம். மிச்சசொச்ச நீரையும் ஆழ்குழாய்க் கிணறுகளின் ராட்சத மோட்டார்கள், பெரும்பசியோடும் தீராத தாகத்தோடும் உறிஞ்சிவிடுகின்றன. தமிழகத்தை நீராதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கு நீர்வளம் குறித்த விழிப்புணர்வு மட்டும்போதாது; அறம் சார்ந்த மனமும் வேண்டும்.

- அ.ஷேக் அப்துல்லாஹ், பெருவளநல்லூர்.



பொன்னான வாய்ப்பு

மார்ச் 21-ல் வெளியான, ‘காங்கிரஸ் தலைமைக்குப் புது திசை காட்டும் பஞ்சாப்!’ தலையங்கம் கண்டேன். மோடியின் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்துக்கொண்டு, காங்கிரஸால் இனியும் காலந்தள்ள முடியாது. இன்றும்கூட இந்தியா முழுமைக்கும் அனைத்துப் பகுதிகளிலும் தனக்கென்று குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தேசியக் கட்சி, முற்றிலும் அழிவது வருங்கால இந்தியாவுக்கும் நல்லதல்ல. மாநிலத் தலைவர்களை வரும் காலங்களில் முழுமையாகச் செயல்பட அனுமதித்தால் மட்டுமே, பஞ்சாபில் கண்ட வெற்றியின் தொடர்ச்சியை வரும் தேர்தல்களிலும் எதிர்பார்க்கலாம். பஞ்சாபில் கிடைத்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்திப் பல முன்மாதிரித் திட்டங்களைத் தயாரித்து, அதை வெற்றிகரமாகச் செயலாக்கமும் செய்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வரும் காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும்.

- பி.ஆறுமுகநயினார், தச்சநல்லூர்.

அறிவிப்பு இங்கே.. பணம் எங்கே?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித்தொகையை உடனடியாக வழங்க பிப்ரவரி 21-ல் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, வறட்சிக்கு இலக்கான பயிர்ச் சேதங்கள், பாதிக்கப்பட்ட நிலங்களின் அளவு ஆகியவை தொடர்பாகக் கணக்கெடுக்கும் பணிகளும், விவசாயிகளிடம் நில அளவுக்கான சான்று, வங்கிக் கணக்கு, முகவரி விவரம் பெறும் பணியும் தீவிரமாக நடந்தன.

அனைத்து மாவட்ட வருவாய்த் துறை சார்பிலும் இதுதொடர்பான விவரம் மாவட்டக் கருவூலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிவாரணத் தொகை மட்டும் எந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல், விவசாயிகள் தவித்துவருகின்றனர். வெற்று அறிவிப்புகள் மட்டுமே விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து விடாது என்பதை அரசு உணர வேண்டும்.

- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்