அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் ஒரு சட்டத்தை விரைவில் கொண்டுவருவதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது வரவேற்கத்தக்கது.
எம்.ஈ.ஆர்-க்கு சட்ட அடிப்படை இல்லாததால்தான் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்தல்) சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டம் நடுவணரசு, மாநில அரசுகள் நேரடியாக நடத்தும் பள்ளிகளுக்கும், பல்கலைக்கழகங்களோடு இணைந்த பள்ளிகளுக்கும் விலக்கு அளித்தது. அச்சமயத்தில் மெட்ரிக் பள்ளிகள் பல்கலைக்கழகங்களோடு இணைந்திருந்தன.
தற்போது பல்கலைக்கழகத்தினின்று விடுபட்டுள்ளதால், அவற்றை நேரடியாக ஒரு அரசாணை மூலம் ஒழுங்குபடுத்தல் சட்டத்துக்கு உட்பட வைக்க முடியும். இன்று மெட்ரிக் பள்ளிகள் விதிகளுக்குச் சட்ட அடிப்படை கிடையாது. தனியார் பள்ளிச் சட்டம் காலத்தால் சீரான நிர்வாகத்துக்கு இடமளித்துள்ளது.
எனவே, தனிச் சட்டம் கொண்டுவருவதற்கு மாறாக, தனியார் பள்ளி ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மெட்ரிக் மற்றும் நர்சரிப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது எளிமையானது, விரைவானது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் விரிவுபடுத்த சட்டத் திருத்தம் தேவைப்படும்.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago