இப்படிக்கு இவர்கள்: மாண்பைச் சீர்குலைத்த அரசு!

By செய்திப்பிரிவு

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் யாவரும் போராட்டம் துவங்கிய நாள் முதல் 23-ம் தேதி அதிகாலை வரையில், மிக நேர்மையாகக் கண்ணியத்தோடும் கடமை உணர்வோடும் பொறுப்புணர்வோடும் செயல்பட்டார்கள். அதற்குப் பின் நடந்த அனைத்தும் துரதிர்ஷ்டமே. இதற்கு அரசும் அரசு எந்திரமுமே பொறுப்பேற்க வேண்டும். கோரிக்கையை முன்னிறுத்திப் போராடிக்கொண்டிருப்பவர்களை மதித்து, அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்து உத்தரவிடுகிறது. இந்த உத்தரவில் சில கேள்விகளை எழுப்பிப் போராட்டத்தைத் தொடருகிறார்கள் என்றால், அவர்களை அரசின் சட்டத்தை ஒப்புக்கொள்ளச் செய்வது அரசின் கடமை. ஆக, மக்களிடம் தெளிவாக விளக்கம் செய்வதற்குப் பதிலாக, அமைதியாகப் போராடிக்கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாகப் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தியது தவறு. போலீஸார் நிகழ்த்திய வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.

- பாபு தாமஸ், ராணிப்பேட்டை.



மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டாடுவோம்!

தமிழில் ஒவ்வோர் ஆண்டும் வெளிவருகிற நூல்களில் ஒருவிழுக்காடு கூட மொழிபெயர்ப்பாகி வேறு மொழிகளுக்குப் போவதில்லை என்பது இன்று நாம் காணும் உண்மை. திருக்குறளே இப்போதுதான் அரபுலகின் பார்வைக்குச் செல்கிறதென்றால், நவீன இலக்கியத்தின் நிலைகுறித்துச் சொல்லவே வேண்டாம். மொழிபெயர்ப்பு படைப்பைப் போல் ஒரு கலை. மொழிபெயர்ப்பாளன் தன் படைப்புத் திறமையைத் தள்ளிநிறுத்திவிட்டு, தன் மொழியாற்றலால் மூல நூலாசிரியனைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.

உலக அளவில் ஒரு படைப்பு கவனம் பெறவும், அப்படைப்பு குறித்த உரையாடல் உலகம் முழுக்க நடைபெறவும் உலக அளவிலான மொழிபெயர்ப்பு அவசியம். எத்தனையோ விருதுகள் இருந்தாலும் சாகித்ய அகாடமி விருது, சிறப்புப் பெறுவதற்கும் மிகுந்த கவனம் பெறுவதற்கும் காரணம், அப்பரிசு பெறும் படைப்பாளரின் படைப்பு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதுதான். அது இந்திய மொழிகள் என்னும் வரையறையைத் தாண்டி, இனி உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மட்டுமல்லாமல் அரபு, சீனம், ஜப்பானிய, பிரெஞ்சு போன்ற உலகின் அனைத்து மொழிகளுக்கும் நவீன இலக்கியங்களை உடனுக்குடன் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், தரமான மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

கல்யாண்ராமன் ‘தி இந்து’ நேர்காணலில் குறிப்பிட்டதைப் போன்று, மொழிபெயர்ப்போடு அப்பிரதி குறித்த உரையாடலைத் தொடங்கிவைக்கவும் இன்று உலகம் முழுக்க ஆள் வேண்டியிருக்கிறது.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



புத்தகத் திருவிழா

ஜனவரி 20-ம் தேதி வெளியான, ‘நிறைவு பெற்ற புத்தகப் பெருவிழா’ என்ற கட்டுரையினைப் படித்தேன். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, நெய்வேலி, திண்டுக்கல், காரைக்குடி போன்று பல இடங்களில் புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடந்துவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. ‘இப்போது தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளங்கள் போன்றவை மக்களோடு மக்களாக ஒன்றிணைந்துவிட்டன. இதன் காரணமாகப் புத்தகம் படிப்போர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது’ என்பதைப் பொய்யாக்கும் வகையில், சென்னை புத்தகக்காட்சியில் வாசகர்கள், லட்சக்கணக்கான புத்தகங்களை வாங்கியுள்ளனர். எத்தனை நவீன சாதனங்கள் வந்தாலும், புத்தகம் படிப்போர் எண்ணிக்கை என்றும் குறையாது என்பதை இந்தச் செய்தி நிரூபித்துள்ளது. ‘நல்ல புத்தகங்கள் வீட்டின் பொக்கிஷங்கள்’ என்ற கூற்று என்றும் நிலைத்து நிற்கும்.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்