திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை ‘இப்படிக்கு இவர்கள்’ (ஜன.25) பகுதியில் படித்தேன். அதில் அவருடைய தன்னடக்கமும், பெருந்தன்மையும் தெரிந்தது. அவர் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பதும் அவற்றில் வரும் செய்திகளுக்கு வினையாற்றுவதும் நல்ல விஷயம். சிறிதும் நிதானம் தவறாமல் அவர் அளித்த விளக்கம், பாராட்டப்பட வேண்டியது. இந்தப் பக்குவம் அவரை மேலும் உயர்த்தும். அதேபோல மறுப்புக் கடிதத்தையும் மறைக்காமல் கட்டம் கட்டி வெளியிட்ட ‘தி இந்து’வின் நேர்மையையும் பாராட்டியே ஆக வேண்டும்.
-எம்.லோகநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர், சிகரலப்பள்ளி.
தண்டிக்கப்பட வேண்டும்
ஜன.25- ல் வெளியான, ‘காவல்துறை நம் நண்பன்தானே?’ தலையங்கம் படித்தேன். மெரினா கடற்கரையிலும் தமிழகத்தின் பல ஊர்களிலும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்களை காவல்துறை முடிவுக்கு கொண்டுவந்த விதம் ஏற்புடையதாக இல்லை. போராட்டக்களத்தில் ஊடுருவியிருந்த சமூகவிரோத சக்திகளை கண்டறிவதில் தோற்றுவிட்டது உளவுத்துறை. தனது தவறை மூடி மறைக்க, காவல்துறை வன்முறையை கையிலெடுத்தது ஆதாரபூர்வமாக நிரூபணமாகி உள்ளது. கலவரங்களை இவர்களே தூண்டிவிட்டு வேட்டைக் காரர்களைப் போல இளைஞர் களை கையாண்ட விதத்தை மன்னிக்க முடியாது. தவறிழைத்தவர்கள் முறையான விசாரணை மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.
-எ.சம்பத், வேலாயுதம்பாளையம்.
இடதுசாரிகளின் துரதிர்ஷ்டம்!
ஜன.24- ல் வெளியான, ‘தமிழக அரசியல்வாதிகளே போராட்டத்தைப் படியுங்கள்’ கட்டுரை தெரிவிக்கும் கருத்துக்கள் அருமை. மாணவர்கள் போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் மக்களை அணுகுவதில் தோல்வியடைந்துள்ளன என்ற பொதுவான கருத்திலிருந்து மாறுபடுகிறேன். விவசாயிகள் போராட்டம், பெண் விடுதலை, ஆலய நுழைவு, தீண்டாமை, கவுரவ கொலை எதிர்ப்பு, தொழிலாளர் நலன் போன்ற பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடிவருகிறது. ஆனால் ஊடக வெளிச்சம்தான் இல்லை. உதாரணமாக 2016 செப்டம்பரில் மிகப் பெரிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆனால், ஒரு சிலவற்றைத் தவிர மற்ற ஊடகங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இது இடதுசாரிகளின் துரதிர்ஷ்டம்.
-இரா.ஜோதி, மாதவரம், சென்னை.
வெற்றிடம் இல்லை!
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் அதை பாஜக நிரப்பும் என்று அதன் தலைவர்கள் மனப்பால் குடிக்க, அரசியல் கட்சிகளும் அதையே நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இளைஞர்களின் எழுச்சி நிகழ்ந்திருக்கிறது. காலம் காலமாக நம்மை அழுத்திக் கொண்டிருந்த காவிரி பிரச்சினை, மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, விவசாய பிரச்சினை, ஏன் முன்னாள் முதல்வர் மரணத்தில் சரியான காரணம்கூட தெரியப்படுத்தாத சூழ்நிலையில் கொதித்து எழுந்திருந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் அதிமுக தொண்டர்களும், எம்எல்ஏக்களும் தங்கள் சுயலாபத்துக்காக அமைதியாக இருந்தார்கள். தமிழர்களின் போராட்ட குணம் முற்றிலும் ஒழிந்துவிட்டதோ என்று நம்மில் பெரும்பாலோனர் மனதுக்குள் குமைந்து கொண்டிருந்த வேளையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப வங்கக் கரையிலிருந்து புயலெனப் புறப்பட்ட நம் இளைஞர்களின் எழுச்சிப் படையைக் காணக் காண எல்லையில்லா மகிழ்ச்சி பொங்குகிறது. நன்றி உணர்ச்சியில் கண்கள் பனிக்கிறது. இளைஞர்களே உங்கள் பாதம் பணிகிறேன்! இனி எமக்கு கவலையில்லை. இனி வெற்றிடம் இல்லை; வெற்றியே நம் இடம்!
-துரை.அனந்தகிரி, இலால்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago