இப்படிக்கு இவர்கள்: அறிவுத் தேடலை முடக்கும் செயல்

By செய்திப்பிரிவு

நாளிதழ்களையும் மாத இதழ்களையும் குறைக்க நூலகத் துறையே முடிவெடுத்திருப்பது வேதனை தரும் செய்தி. (‘வாசிப்பை முடக்கும் உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்’ ஏப்ரல்-1) தலையங்கம் படித்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் கூடுதலான பத்திரிகைகளை வாசிக்க பெரும்பாலும் நூலகத்துக்குத்தான் செல்வார்கள். மக்களை வாசிக்க வைக்க வேண்டியது அரசின் கடமை. அதைவிடுத்து, சிக்கனம் என்ற பெயரில் இதழ்களைக் குறைப்பது, அறிவுத் தேடலை முடக்கும் செயல். எந்த நாட்டில் அறிவுப் புரட்சி வளர்கிறதோ அந்நாட்டின் வளர்ச்சியும் பெருகும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்.

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.



கௌரவிக்கலாமே?

சட்டப் பேரவையில் கருணாநிதி நுழைந்து 60 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. திராவிட இயக்கத்தின் முதல் வரிசை சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.. தொடர்ச்சியாக அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்றவர்.. இளம் வயதில் அரசியலுக்கு வந்து ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றியவர் என்கிற முறையில், இது ஒரு சரித்திர நிகழ்வு. எனவே, கட்சி வேறுபாடு, விருப்பு வெறுப்பின்றி வைரவிழா நாயகன் கருணாநிதியின் சாதனைக்காக சட்டமன்றக் கட்டிடத்தின் நுழைவாயில் ஒன்றுக்கு அரசு, கலைஞர் கருணாநிதியின் பெயரைச் சூட்டி அவரைக் கௌரவிக்க வேண்டும்.

- பொன்விழி, அன்னூர்.



பெற்றோர் கவனத்துக்கு..

பள்ளித் தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறை துவங்கும் நேரமிது. விடுமுறை என்பது அடுத்த கல்வியாண்டுக்குத் தங்களை உடலாலும் மனத்தாலும் தயார் செய்வதற்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலம். உடனடியாக, அடுத்தகட்ட பயிற்சி வகுப்பில் குழந்தைகளை அடைக்கும் முன், தாங்கள் பயின்றபோது கோடை விடுமுறையை எப்படிக் கழித்தோம் என்பதைப் பெற்றோர் எண்ணிப் பார்த்தல் நலம். அடுத்த கோடை விடுமுறை எப்போது வரும் என ஏங்க வைக்கும் நினைவுகள் அவை. ‘வாழ்க்கையில் கல்வி மிகமிக அவசியம்; ஆனால் வாழ்க்கைக் கல்வி அதைவிட அவசியம்’ என்று சிந்தித்துச் செயல்படுத்துவது வருங்காலச் சந்ததியினருக்கு நலன் தரும்.

- சு.தட்சிணாமூர்த்தி, கோவை.



ஜக்கி வாசுதேவும் யதார்த்தமும்

மார்ச் 31 ஜக்கி வாசுதேவ் உடனான பேட்டி, உரையாடல் என்பதைத் தாண்டி, சமரசமற்ற பல கேள்விகளுடன் கூடிய ஒரு விவாதமாகவே அமைந்திருந்தது. பொதுவாக, ஆன்மிகம் என்பது புரியாத ஒன்றை மையமாக வைத்து விளையாடும் வார்த்தை விளையாட்டுதான் என்பதை ஜக்கி வாசுதேவின் பெரும்பாலான பதில்களிலிருந்து உணர முடிந்தது. அதிலும், தலித்துக்குப் பிறப்பிலிருந்து இழைக்கப்படும் அநீதி பற்றிய கேள்விக்கு அவர் அளித்திருந்த பதில் யதார்த்தத்துக்கு வெகுதொலைவு.

- வி.சந்திரமோகன், பெ.நா.பாளையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்