எச்.ஐ.வி-க்கும் உழவர் அட்டைக்கும் என்ன சம்பந்தம்?

By செய்திப்பிரிவு

>'எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு உதவித்தொகைத் திட்டம் வருமா?' என்ற செய்தி கண்டேன். தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலமாக எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் பரவுவது 0.27%ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. தொற்றைத் தடுப்பதில் 'இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்' என்று மத்திய அரசால் பாராட்டப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள எச்.ஐ.வி. காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இந்த உதவித்தொகையை வாங்க, உழவர் அட்டை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. உழவர்களுக்கு மட்டுமா எச்.ஐ.வி. தொற்று ஏற்படுகிறது? எனவே, காசநோய் மற்றும் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். கேரளத்தில் அவ்வாறு நிபந்தனையின்றி, ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதை இங்கே நினைவூட்டுகிறேன்.

- மா.சேரலாதன்,மாநிலச் செயலாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.

*

ஆவணப்படுத்தப்பட வேண்டும்

மக்கள் பாடகனுக்கு மக்கள் நாளிதழ் ஒன்றின் அஞ்சலியாக நாறும்பூநாதனின் கட்டுரை அமைந்திருந்தது. தமிழகத்தின் வீதிகளில் திருவுடையானின் காலடி படாத, நாவடி பாடாத நகரவீதி என்று எதுவும் இருக்க முடியாது.

நூற்றுக்கணக்கான தமுஎகச கலை இரவுகளிலும் தொழிற்சங்க - ஜனநாயக இயக்கங்களின் பொதுக்கூட்ட மேடைகளிலும் அவர் பாடிய பாடல்கள் தமிழ் மாநிலமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவரது கலை நிகழ்வுகள் யாவும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இனிவரும் வரலாற்றில் ஒருநாள் அவரது கனவுகள் நிறைவேறும்வகையில் புதிய சமுதாயம் படைத்திடப் 'பாடு'படுவதே அவருக்கு நாம் செலுத்தும் சரியான அஞ்சலியாகும்.

- சு.மாதவன், புதுக்கோட்டை.

*

வியாபார நோக்கில் கல்வி

சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் மிகச் சிலவற்றைத் தவிர, அனைத்துமே வியாபார நோக்கத்துடன் நடந்துவருகின்றன. அந்நிறுவனங்களின் கட்டிட அமைப்பைப் பார்த்துப் பெரும்பாலான மாணவர்கள் ஏமாந்துபோகிறார்கள்.

ஒரு சிலருக்கு வளாக நேர்காணலில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு, இதைக் காண்பித்தே ஒப்பேற்றிக்கொள்கிறார்கள். எந்தக் கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தாலும் இவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதிலும் காசு பார்த்துவிடுவார்கள். மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்நிறுவனங்களின் பேராசிரியருக்கு மிகவும் குறைவாக சம்பளம் வழங்கப்படுகிறது. இதை வைத்துத்தான் குடும்பத்தையும் நடத்தி, சிரித்த முகத்துடன் சிறப்பாகப் பாடமும் நடத்த வேண்டும். மதச் சிறுபான்மை என்ற பெயரில் புதிதாகக் கல்வி வியாபாரம் செய்ய வந்திருப்பவர்களைக் கட்டுப்படுத்த அரசு சிறப்புச் சட்டங்களை ஏற்படுத்த வேண்டும்.

- ஏ.எம்.ஜான், ராமநாதபுரம்.

*

இதயமற்ற எந்திரன்

திபெத்தியர்கள் மீதான சீனாவின் அடக்குமுறை, பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறையை ஒப்பிடும் குஹாவின் கட்டுரை படித்தேன். பாலஸ்தீனத்துக்காக இஸ்ரேலில் குரல்கொடுக்கும் சமாதான முகாம் என்ற அமைப்பு இயங்குவதையும், ஆனால் திபெத்தியர்களுக்காகக் குரல்கொடுக்க யாரும் இல்லை என்பதும் வேதனைக்குரியது.

சீனாவின் அடக்குமுறைகளும், மனிதாபிமானமற்ற கொடிய செயல்பாடுகளும் உலகுக்குப் புதியதல்ல. தன் எல்லைப்புறத்தில் உள்ள எந்த நாட்டுடனும் அதற்கு நல்லெண்ண நட்பு கிடையாது. இப்படி அமைதி, அன்பு, நட்பு எதற்குமே இடம்தராத இதயமற்ற எந்திரனாக சீனா வலம்வருவதை எந்த ஜனநாயக சக்திகளாலும் ஜீரணிக்க இயலாது.

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்