தெரு நாய்களும் நாமும்

By செய்திப்பிரிவு

தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஆபத்து என்கிறது ‘ஒரு நாயிற்றுக் கிழமை நள்ளிரவு’ கட்டுரை. நாய்களை ‘காப்பகத்தில்’ விட்டுவிடுங்கள் என்கிறார் கட்டுரையாளர். ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஒரு இடத்தை வைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்த்திருக்கலாம். தெரு நாய்களைக் ‘காப்பகத்தில்’ வைக்க ஜோத்பூர் நகராட்சி மேயர் முயற்சி செய்தார். ஒரே இடத்தில் வேலி கட்டி வைத்தார். அதில் நாய்கள் சண்டையிட்டு பலவீனமான நாய்களைக் கொன்றன. அந்த அழுகிய உடல்களுக்கு இடையே மற்ற நாய்களும் இறந்தன. கைவிடப்பட்ட வீட்டு நாய்களைத்தான் ப்ளூ க்ராஸ் கூட காப்பகத்தில் வைக்கிறது.

‘ரேபிஸ்' தாக்கிய நாய்கள் தவிர, மற்ற நாய்கள் தற்காப்புக்கு மட்டுமே கடிக்கின்றன. நம்மோடு நட்பாக இருக்கும் முதல் விலங்கு நாய்தான். நீங்கள் பழக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்களோடு வந்து ஒட்டிக்கொள்ளும்.

காட்டில் ஓநாய்போல உலவியதை நம் மூதாதையர் வேட்டைக்காக நாயாக மாற்றிவிட்டனர். இப்போது அவற்றின் தேவை இல்லை. தெருவுக்குத் துரத்தி விட்டோம். தெரு நாய்களின் வாழ்க்கை மிகவும் அவலம். தெரு நாய்களின் குடியிருப்பு குப்பைத் தொட்டிகள்தான். அதுதான் உணவுக்கான ஆதாரம். உணவு, தண்ணீர் கிடைக்காமல் பல நாட்கள் நாய்கள் பட்டினி கிடக்கின்றன. வெயிலிலும் குளிரிலும் ஆயிரக்கணக்கில் நாய்கள் இறக்கின்றன.

அடுத்த முறை தெரு நாயைப் பார்க்கும்போது பிஸ்கட் போடுங்கள். குடிக்கத் தண்ணீர் கொடுங்கள். அப்படிச் செய்யா விட்டாலும்கூடப் பரவாயில்லை... குறைந்தபட்சம் கல்லெடுத்து அடிக்காமல் விலகிப்போங்கள். நாயும் உங்களைக் கடிக்காமல் விலகிப்போகும்.

- ஸ்ரீதர் சுப்ரமணியம், மின்னஞ்சல் வழியாக…



நாய் பற்றிய கட்டுரை நன்றாக உள்ளது. நாய்களால் நகரவாசிகள் மட்டும் பாதிக்கப் படவில்லை. எங்களைப் போன்ற கிராம மக்களும் பெரும் பாதிப் படைந்துவருகின்றனர். கறிக்கோழிப் பண்ணையில் இறந்த கோழிகளைப் புதைக்காமல் வெளியில் போட்டுவிடுகிறார்கள். இதைச் சாப்பிடும் நாய்கள் மனிதன் மற்றும் ஆடு, மாடு போன்றவற்றைக் கடித்து ‘ரேபிஸ்' நோயை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கும் வகையில் கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கு அரசு நல்ல வழிகாட்டலை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

- அழகிய தாடாளசாமி, புதுச்சேரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்