தமிழகத்தின் இன்றைய சூழலை அப்படியே படம் பிடித்துக்காட்டியது 'காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?' தலையங்கம். அதில் தொனிக்கும் ஆதங்கம் ஆட்சியாளர்களின் காதில் கொஞ்சமாவது விழ வேண்டும்.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிவரும் என்பதாலோ அல்லது அவருடைய துறையில் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஒப்புக்கொள்வதால் அவருடைய ஆளுமை குறித்து விமர்சனம் வரும் என்பதாலோ காவல் துறையில் நிகழும் பெரும்பாலான தவறுகள் மூடி மறைக்கப்படுகின்றன.
போர்க் காலங்களில்கூடப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்று பெருமை மிக்க வரையறை வைத்திருந்த தமிழர்கள் வாழ்ந்த நாடு இது.
அந்தப் புகழையெல்லாம் சீர்குலைக்கும் விதமாக, சாதாரண காலங்களில்கூட கர்ப்பிணிப் பெண்களும், சிறார்களும், கடைவீதிக்கு வந்தவர்களும் ஆட்சியாளர்கள், உயரதிகாரிகளின் ஆசிபெற்ற காவலர்களால் கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும், மிருகத்தனமாகவும் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நிலை வெட்கக்கேடில்லையா?
- செ.தமிழரசு, பவானி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago