இப்படிக்கு இவர்கள்: இதையும் யோசிக்கலாமே?

By செய்திப்பிரிவு

புத்தகக் காட்சிகள் மட்டுமே தமிழகத்துக்குப் போதுமானதல்ல. புத்தக வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள், பொதுமக்களிடையே அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களின் வழியே முயற்சிக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் விருப்பமான ஒரு புத்தகத்தை தேர்வுசெய்து, அப்புத்தகத்தைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதச் செய்து மதிப்பெண் வழங்கலாம். பொதுமக்களையும் ஊக்கப்படுத்தலாம். இதனால், புத்தக வாசிப்புத் திறன்கூடும். புத்தக விற்பனையும் அதிகரிக்கும். சிறந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாகக் குறைந்த பட்ச உதவித்தொகை வழங்கலாம். அதேபோல அரசு விழாக்களிலும் கல்வி நிலையங்களிலும் நூல்களையே பரிசாக வழங்க வேண்டி அரசு ஆணை பிறப்பிக்கலாம். அரசாங்கமே எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கட்டுரைகள், கதைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கலாம். இதற்கான பரிசுத் தொகைகளைப் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நூலகவரி தொகையினைப் பயன்படுத்தலாம்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.



பாரபட்சமற்ற நடவடிக்கை

ஜன.6 ல் வெளியான, ‘உயர் அதி காரிகள் ஊழல்மயமாவது ஏன்?’ கட்டுரை உண்மையை உரக்கச் சொல்கிறது. 1968-க்குப் பின்னர்தான் அதிகாரவர்க்கமும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து நிர்வாகத்தைச் சிதைத்துவிட்டனர். குறிப்பாக, இதர மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் பலர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதும், தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர்களை மிரட்டி வேலை வாங்குவதும், பயத்திலேயே அவர் களைப் பணியில் வைத்திருப்பதும், கோப்புகளில் ஒப்புதல் அளிக்காமல் நடவடிக்கையைக் காலதாமதப்படுத்து வதும் தொடர்கிறது. எனவே, லஞ்ச ஒழிப்புத் துறை, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை பாரபட்சமின்றி செயல்பட்டால் மட்டுமே அதிகார வர்க்கம் செய்யும் ஊழல்களைக் களைய முடியும். ஆளும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்தில் அத்துமீறித் தலையிடுவதைத் தவிர்த்தால் நிர்வாகம் செம்மையாகும்.

- ரா.இராஜா பாஸ்கர், மதுரை.



தமிழும் ஜல்லிக்கட்டும்...

பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்கள் வயதுப்படி பிரிக்கப்பட்டுக் களமிறக்கப் படுகிறார்கள். குத்துச்சண்டையில் சம எடையுள்ளவர்களுக்கு இடையேதான் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியாளர்களின் சம்மதமும் பெறப்படுகின்றது. இவ்விதிகள் ஜல்லிக்கட்டில் பின்பற்றப்படுவதில்லை. காளையும் மனிதனும் சமநிலையிலும் இல்லை, சம எண்ணிக்கையிலும் இல்லை. இதனை எவ்வாறு வீர விளையாட்டு எனக் கூற முடியும். இதற்கு மாறாக, மல்யுத்தப் போட்டிகளைக் கிராமம்தோறும் நடத்தலாம். அதனால், தனி மனிதனுக்கும் பயன் உண்டு. நாட்டுக்கும் நல்ல மல்யுத்த வீரர்கள் கிடைப்பார்கள். ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளம் என்போர், தமிழரின் தலையாய அடையாளமான தமிழ்மொழிப் பள்ளிக் கல்வியில் உள்ள இழிநிலை கண்டு கொதிப்படைய வேண்டாமா? பயிற்றுமொழியாகத் தமிழ் இருந்தால்தானே தமிழில் எல்லா வளமும் சேரும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



அமைச்சருக்கு அழகல்ல!

பயிர்கள் கருகியதால், விவசாயிகள் மனமுடைந்து உயிரிழந்துவரும் நிலையில், தமிழக வறட்சிப் பாதிப்புகளைப் பார்வையிட கடலூர் வந்த அமைச்சர் சம்பத், வயது முதிர்ச்சி, உடல் உபாதைகள் போன்றவற்றால் விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறியிருக்கிறார். ஜெயலலிதா சிறையில் இருந்தபோதும், அவரது மரணத்தின்போதும், தமிழகத்தில் இறந்தவர்களை எல்லாம் அதிர்ச்சியில் இறந்தவர்கள் என்று அரசு கூறியது. ஜெயலலிதா மீது அன்பு கொண்டவர்கள், அவர் சிறை சென்றபோதும், அவர் இறந்தபோதும் அதிர்ச்சியில் தமிழர்கள் இறப்பது உண்மையாக இருக்கும்போது, தான் பாடுபட்டு விளைவித்த பயிர் கருகுவதைப் பார்த்து, மனமுடைந்து இறந்த விவசாயிகளை மட்டும் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்? இது அமைச்சருக்கு அழகல்ல!

- எஸ்.மாணிக்கம், மின்னஞ்சல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்