மார்ச் 18 அன்று வெளியான ‘உறங்கும் பள்ளி நூலகங்களை எழுப்பிவிடுங்கள்’ தலையங்கம் வாசித்தேன். மிகவும் அருமை. ‘தி இந்து’வின் வாசிப்பு இயக்கம் பாராட்டத்தக்கது. மானுட மேம்பாட்டைக் கடந்து, சகல உயிரினங்களையும் நேசிக்கச்செய்யும் வாசிப்புப் பழக்கத்தைப் பல பள்ளி, கல்லூரிகள் பாடப் புத்தகத்தைவிட்டு வேறொன்றை வாசித்தால் அவன் வாழ்க்கை பாழாகிவிடும் எனத் தவறாக நினைத்துக்கொண்டு, தடைசெய்துவைத்திருப்பதை என்னவென்று சொல்வது?
பெற்றோர்களும், கல்வி என்பது பாடப்புத்தக வாசிப்பு மட்டும்தான் என்று புரிந்துகொள்வதே கவலை தரக்கூடியதாக இருக்கிறது. அதைக் கடந்த வாசிப்பு கல்வி இல்லை என்பதுடன், அதைத் தேவையற்றதாகவும் கருதுகிறார்கள். அதேசமயம், தமது பிள்ளைகள் மடிக்கணினியையோ, ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதையோ ரிலாக்ஸ் என்ற வகையில் அங்கீகரிக்கின்றனர். இந்த முடிவுக்கு அவர்கள் எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை. பாடப்புத்தகம் தவிர்த்த பிற வாசிப்புப் புத்தகங்களும், வாசக சாலைகளுமே ஒன்றுக்கும் உதவாததாக அவர்கள் நினைக்கிறார்கள். பொது வாசிப்புக் கல்வி ஆளுமைக்கு உதவுமே தவிர, அதைக் குறைப்பதற்கல்ல என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.
சுய ஆளுமையையும், சுய சிந்தனையையும் வளர்க்கும் வாசிப்புக்கு எதிராகக் கல்வி நிலையங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். அதே சமயம், தமது பிள்ளைகள் சுயசிந்தனை பெறுவதை ஆபத்தாகப் பெற்றோர்களே கருதுவதுதான் வேதனை. பெற்றோர்கள் முன்மாதிரியாக இருந்து வாசிப்பைத் தொடங்கினால் பள்ளி, கல்லூரிகளின் நூலகங்கள் தமது வாசல்களைத் தாமே திறக்கும். தேவை - வாசிப்பு பற்றிய புரிதலேயாகும்!
- இரா.மோகன்ராஜன், எழுத்தாளர், முத்துப்பேட்டை.
சரியான தீர்ப்பு
100 சீமைக் கருவேல மரங்களை 20 நாட்களில் அகற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், தவறு செய்த நபர் ஒருவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ள அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு பாராட்டுகள் (மார்ச் 16). சிறு குற்றம் செய்பவர்களைத் தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற நீதிபதிகளும் இம்மாதிரி தண்டனை வழங்கலாம். இதன் மூலம், நாட்டில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் ஒழிய வழியேற்படும். அந்தக் குற்றவாளிகளுக்கும் பிராயச்சித்தம் செய்த திருப்தியும் கிடைக்கும். ஏனைய நீதிபதிகளும் பரிசீலிப்பார்களா?
- கல்கிதாசன், சென்னை.
சரியான நடைமுறை அல்ல
பிப்ரவரி 27 அன்று வெளியான ‘திணிப்புத் திட்டங்களை எதிர்க்கும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கிறதா?’ கட்டுரை அருமையாக இருந்தது. இம்மாதிரியான பிரச்சினைகள் தமிழகம் மட்டுமின்றி, உலக நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆப்கானிஸ்தான், சோமாலியா, நைஜீரியா போன்ற நாட்டுமக்களின் மரண ஓலத்தில்தான் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சந்தோஷத்தில் இருக்கின்றன. இந்தியா மட்டும் விதிவிலக்கா என்ன? மக்கள் விழிப்புணர்வு அடைந்து போராட்டத்தில் இறங்கினால், அசுர பலத்துடன் காவல் துறையையும் ராணுவத்தையும் கொண்டு போராட்டத்தை அடக்கி ஒடுக்கி, நிர்மூலமாக்கிவிடுவதையே அரசுகள் வழிமுறையாகக் கொண்டுள்ளன. ஆனால், அது சரியான நடைமுறை அல்ல என்பதை அரசுகள் உணர வேண்டும்.
- சங்கர சுப்பிரமணியன், கோரம்பள்ளம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago