இப்படிக்கு இவர்கள்: பொய்யகலத் தொழில் செய்வோம்!

By செய்திப்பிரிவு

மாணவர் போராட்டத்தின் ஓர் ஆரோக்கியமான தொடர் விளைவே போல், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பெப்சி, கோக் போன்ற பானங்களை இனி விற்பதில்லை என்று தமிழ்நாட்டு வணிகர் சங்கங்கள் முடிவு எடுத்திருப்பது நல்ல விஷயம். வரவேற்கப்பட வேண்டியது. அதேசமயம், வரும் மாம்பழ சீசனில் ‘கால்சியம் கார்பைட்’ கல் போட்டு செயற்கையாகப் பழுக்கவைத்த மாம்பழங்களை எந்தப் பழ வியாபாரிகளும் விற்பதில்லை என்றும் தீர்மானம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்யாத பழ வியாபாரிகளை வணிகர் சங்கங்கள் புறக்கணிப்பதோடு அல்லாமல், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். தீமைகளில் அயல்நாட்டுத் தீமை, உள்நாட்டுத் தீமை என்று தனித் தனியாக எதுவும் இல்லை. ‘வையகம் காப்பவரேனும் - சிறு வாழைப் பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்தே - பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்’ என்ற பாரதியின் வரிகளே நினைவில்வருகின்றன.

- மோகன் அனந்தராமன், சென்னை.

குணக்கேடு தரும் செல்வம்

தஞ்சாவூர்க் கவிராயரின், ‘கைமாற்று வெண்பா’ (ஜன.26) படித்தேன். கட்டுரையாளரின் தந்தை ஆரம்பப் பள்ளி ஆசிரியராக இருந்தும் குடும்பம் நடத்த எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார். இன்றைய அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு மேம்பட்ட தாக இருக்கிறது! அதேபோல், விவசாயியின் வருமானம் அந்த அளவுக்கு உயரவில்லையே.. வீழ்ச்சிதானே அடைந்திருக்கிறது. விவசாயம் உயிர்நாடித் தொழில் அல்லவா? இருந்தும் இந்த இழிநிலையில்தானே இருக் கிறது. ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்ஒர்த், ‘வசதி வரவர நற்குணங்கள் குறைந்துவிடும்’ என்று சொன்னார். இதைச் சொல்வதால் வறுமையைக் கொண்டாடுவதாகக் கொள்ள வேண்டாம். கொல்லும் வறுமையும் வேண்டாம்.. குணக் கேடுகளைக் கொண்டுவரும் செல்வச் செழிப்பும் வேண்டாம்!

- ம.கதிரேசன், மதுரை.

ஒரு ராயல் சல்யூட்!

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர் களால் அமைதியாக, அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம், போலீஸாரால் அதர்ம வழியில் முடித்துவைக்கப்பட்டது வேதனை யான நிகழ்வு! எனினும், அந்நிகழ்வில் அடிக்க ஓடிவந்து தடுக்கித் தரையில் வீழ்ந்த போலீஸ்காரர் ஒருவரை, அவரால் அடிபடவிருந்த இளைஞனே தூக்கி நிறுத்தி ஆசுவாசப்படுத்தும் காட்சி இணையத்தில் வெளியாகி.. இளைஞர்களின் மனிதாபிமானத்தை மீண்டும் நிரூபித்தது.

இதைவிட நெகிழ்வான செய்தி… மாணவிகள், குழந்தைகளுடன் தாய்மார்கள் என்று ஆயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் பங்கெடுத்து இரவு பகலாக அமர்ந்திருந்தார்கள். அப்பெண்களிடம், “இப்படி இரவு பகலாக உட்கார்ந்திருக்கிறீர்களே, உங்களுக்கு பாதுகாப்பு யார்?” என்று கேட்டபோது, அவர்கள் புன்னகைத்து, ‘‘இதோ இத்தனை இளைஞர்கள் இருக்கிறார்களே, இவர்கள்தான் எங்களுக்குப் பாதுகாப்பு!” என்று பதில் சொன்னார்கள். அந்த அளவு கண்ணியம் காத்த அந்த இளைஞர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!

- கல்கிதாசன், எழுத்தாளர்.

பாராட்டுக்குரியது

நமது முதல்வரின் செயல்பாடுகளும் அணுகுமுறைகளுமே மக்கள் மனதில் அவரை உயர்த்தியிருக்கிறது. கடந்த கால அனுபவங்கள் முதல்வரை எளிதில் அணுக முடியாத நிலையிலேயே தமிழக மக்களை நிறுத்தியிருந்தது. மக்களின் விமர்சனங் களையும் எதிர்ப்பு களையும் ஏற்றுக்கொள் ளும் மனப்பான்மை அவரை மேலும் உயர் நிலைக்கே கொண்டு செல்லும். தனக்கெதி ராகத் தொடுக்கப்படும் விமர்சனங்களை தன்னை மெருகேற்றும் நுட்பங் களாய் கொள்வதே அவரை உயர்த்தும்.

- பாபு டி தாமஸ், மின்னஞ்சல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்