காலங்கடந்த கவலை

By செய்திப்பிரிவு

ஐ.நா. சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன், இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது ஐ.நா. தவறிழைத்துவிட்டது என்று காலங் கடந்து கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதனால் என்ன பயன்? சரணடைய வந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைச் சாக்குழிக்குள் தள்ளிய இலங்கை இனவாத அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தி, அதன் மீது நடவடிக்கை எடுக்க முயல்வாரா?

பதவிக் காலம் முடியும் தறுவாயில் அவருக்கு வந்த ஞானோதயத்தால் இழந்த உயிர்களை மீட்கத்தான் முடியுமா? முறையாகச் செயல்படாத பிரதிநிதிகள் மீது ஏதாவது நடவடிக் கைதான் எடுக்கப்பட்டதா? உறவு களையும், உடமைகளையும் இழந்து வாழ்வைத் தொலைத்து நிற்கும் தமிழர்களின் எதிர்கால வாழ்க்கை உத்தரவாதத்துக்கு ஐ.நா. அமைப்பு என்ன மாதிரி உதவ முடியும்? இந்திய அரசின் கண்டுகொள்ளாத் தனமே இக்கொடுமைகளுக்கெல்லாம் காரணம்.

- நா.வீரபாண்டியன், பட்டுக்கோட்டை.

*

கடித இலக்கியம்

அர்பத்நாட் வங்கி பற்றி, 3.9.16 அன்று 'இப்படிக்கு இவர்கள்' பகுதியில் நாறும்பூநாதன் குறிப்பிட்ட பல தகவல்கள், அர்பத்நாட் வங்கி பற்றிய இன்னொரு கட்டுரை படித்த திருப்தியைத் தந்தது. மேலும், இந்தியன் வங்கியின் பின்புலம் இவ்வளவு சுவாரஸ்யமானதா? கடித இலக்கியம் எவ்வளவு அருமையானது.. அலாதியானது என்பதை 'தி இந்து'வின் கடிதங்களைப் படிக்கும்போது அதை உணர முடிகிறது!

- பேராசிரியர் பி.சேகர், அரசுக் கல்லூரி, சேலம்.

*

வாக்களிக்கும் கருவி

நாடாளுமன்றத்தின் மசோதா தொடர்பான வாக்கெடுப்பு விவரங்களை அறிந்துகொள்ள, 'வேண்டாம் கட்சித் தாவல் சட்டம்'கட்டுரை உதவியது. 14-வது நாடாளுமன்றத்தின் 248 மசோதாக்களில் வெறும் 8 மட்டுமே பதிவுசெய்யப்பட்ட வாக்கெடுப்பைச் சந்தித்தன என்பது வாசகர்களுக்கு ஒரு புதிய தகவல்.

காற்றில் கலந்து ஒலிக்கும் குரல்பதிவுகளைக் காட்டிலும், அனைத்து உறுப்பினர்களின் மேஜைகளிலும் பொருத்தப்பட்டுள்ள வாக்களிக்கும் கருவிகளைப் பயன்படுத்தினால், மசோதாவுக்கான ஆதரவு மற்றும் ஆதரவு இல்லை என்ற விவரங்களைச் சதவீதக் கணக்கில் துல்லியமாக அறிய உதவும்.

- கு.பாரதிமோகன், நா.பரமத்தி.

*

கண்கவர் ஓவியங்கள்

சென்னையில், பொதுநல அமைப்பினரின் தொடர் முயற்சியால் மேம்பாலம், சுவர்களில் 3-டி ஓவியங்கள் வரைந்து வருவது கண்களையும் கருத்தையும் கவர்வதாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மேம்பாலங்களிலும் அதன் சுவர்களிலும் பொருத்தமான 3-டி ஓவியங்கள் வரைய மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலங்களும் சுவர்களும் பலவித விளம்பரங்களாலும் பொதுக்கூட்ட அறிவிப்புகளாலும், பிறந்தநாள் வாழ்த்துகளாலும் படாதபாடுபடுகின்றன.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

*

தீர்வுதான் என்ன?

வன்முறை தடுப்போம் 'தாக்குதலிலிருந்து மாணவி மோனிகாவைக் காப்பாற்றிய மக்கள்' செய்தியைப் படித்தேன். மக்கள் இப்படி விழிப்புணர்வுடன் இருந்தால், பெரும் குற்றச் செயல்களைத் தவிர்க்கலாம். இதுபோன்ற குற்றவாளிகள், பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் கிடையாது. ஏதோ உணர்ச்சி வேகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்தான்.

எனவே, சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும் மொபைல் போனில் படம் எடுத்துக்கொண்டும் இருக்காமல், சுற்றி வளைத்துப் பிடித்தால், குற்றவாளியும் பிடிபடுவான், அரிய உயிரும் காப்பாற்றப்படும். பொதுஇடத்தில் நிகழும் வன்முறைகளும் கட்டுக்குள் வரும்.

- கே.சிராஜுதீன், முசிறி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்