ஜூன் 6 அன்று வெளியான, ‘போராட்டக்காரர்களும் குற்றவாளிகளும் ஒன்றா?’ தலையங்கம் படித்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. குடிமக்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த முழுச் சுதந்திரமும் உண்டு. இந்த வகையில்தான் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதப் போராட்டம் போன்ற உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போன்ற பிரச்சினைகளைச் சரியாக அணுக முடியாமல் தடுப்புக் காவல் சட்டத்தைக் கையில் எடுக்கிறது அரசு. இது ஜனநாயக மீறல். உயர் நீதிமன்றம் இதைக் கண்டித்திருப்பதுடன், எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அறிவுறுத்தியிருப்பதும் வரவேற்கத்தக்கது!
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
ராவணன் ஆரியரா?
ஜூன் 6 அன்று வெளியான, ‘ராமனும் பசுவும்’ கட்டுரை யில் "தென்னாட்டில் ராவணன் அசுரன் - திராவிடன்; வடநாட்டில் இராவணன் பிராமணன் - ஆரியன்!" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. "ராமாயணம் என்பது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையே நடைபெற்ற போரை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனைக் கதை" என்று பண்டித ஜவாஹர்லால் நேரு எழுதியுள்ளார். "ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றி யதையும் உணர்த்தும் நூல்" என்று மத்திய அமைச்சராக இருந்த சி.ஜே.வர்க்கி, ‘இந்திய சரித்திரப் பாகுபாடு’ என்ற நூலின் 15-வது பக்கத்தில் குறிப் பிட்டிருக்கிறார். "ராமாயணக் கதையா னது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூல் ஆகும் என பண்டிதர் டி.பொன்னம்பலம்பிள்ளை தனது ‘மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ’ எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.
மாட்டரசியல் ராமர்
அரசியலை மறைக்க மாடு அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என்பதை யதார்த்தமாகச் சுட்டிக்காட்டி உள்ளார் கட்டுரையாளர் (ராமனும், பசுவும், ஜூன்.6) இந்தியாவில் மாடு வளர்ப்பு குறித்தும் அவை மாட்டிறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் நிலை குறித்தும் விரிவாக விவரித்துள்ளது கட்டுரை. சமையலறையில் என்ன சமைக்க வேண்டும் என்று அரசு தீர்மானிக்கும் ஓர் அசாதாரணமான நிலைக்கு பாஜக கொண்டுவந்துள்ளது. மாட்டைப் பற்றிக் கவலைப்படும் மத்திய அரசு வாக்களித்த மக்களைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும்.
- எம்.கபார், மதுக்கூர்.
காயிதே மில்லத்தின் சீரிய பணி
காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி வெளியான கட்டுரை வாசித்தேன். இது நாள் வரை காயிதே மில்லத் பற்றி பரவலாக பேசுவார்கள். ஆனால் இப்போதுதான் அவரது பணியை தெளிவாக அறிய முடிகிறது. இன்னும் அவர் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. தஞ்சை கடைமடைப் பகுதி விவசாயக் குடும்பங்கள், கடற்கரையோர மீனவச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வியில் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியின் பங்கு மகத்தானது. பின்தங்கிய கிராமப் பகுதியில் அந்தக் காலத்திலேயே கல்லூரி அமைத்தது காயிதே மில்லத்தின் சீரிய பணிக்கு உதாரணம்!
- முருக சரவணன், பட்டுக்கோட்டை.
மனதில் உறுதி வேண்டும்
கென்யாவைச் சேர்ந்த இப்ராஹீம் முகுங்கா வசீரா, காலணி அணியாமலேயே 23 கிலோ மீட்டர் தூரம் அரை மாரத்தான் போட்டியில் ஓடி வென்றிருப்பது ஆச்சரியம் தருகிறது. வெறும் காலுறைகளை மட்டும் அணிந்தபடி அத்தனை தூரம் ஓடுவதே சிரமமான விஷயம். அதில் வென்றும் காட்டியிருப்பது அவரது மன உறுதியைக் காட்டுகிறது. மனதில் உறுதி இருந்தால் எந்த சாதனையையும் செய்யலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் நல்ல உதாரணம்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago