சிறப்புமிக்க ஒரு தலையங்கம் மார்ச் 10 அன்று வெளியான ‘தமிழும் தமிழருமே முதன்மை அக்கறை!’ தமிழர் முன்னுள்ள சவாலைத் தெளிவாக விவரித்துள்ளீர்கள். ஐஏஎஸ் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க ‘தி இந்து’ முன்வந்திருப்பது பாராட்டுதற்குரிய செயல். ஒன்றுபட்ட பஞ்சாபின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் பிரதாப் சிங் கைரோன். சர்வாதிகாரி என்று அறியப்பட்டாலும் நேருவால் மிகவும் மதிக்கப்பட்ட முதல்வர். பல திட்டங்களை மத்திய அரசுக்கு அனுப்பினாலும் அங்கு உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று கருதிய அவர், ‘டெல்லியைக் கைப்பற்றுவோம்’ என்று முழங்கினார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த உத்திகளில் ஒன்று, பஞ்சாப் மாணவர்களை ஐஏஎஸ் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துவது. அதற்காக, ஒவ்வொரு கல்லூரியிலும் ஐஏஎஸ் ஆயத்த வகுப்புகள் நடத்தக் கூடுதல் ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கினார். மிக விரைவில், டெல்லி தலைமைச் செயலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கோலோச்சிவருவதை இன்றும் காண்கிறோம். சில கல்லூரிகளுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நாட்டுக்கே உணவு வழங்கும் மாநிலமாக பஞ்சாப் விளங்கியபோதிலும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க சிறு தொழில்களில் ஈடுபட வைத்தார். அவர்களது உற்பத்திப் பொருட்களை அரசே வாங்கிக்கொண்டது. தொலைநோக்கோடு செயல்பட்ட கைரோன் போல, தமிழகத்தை உருவாக்கிட நாமும் உறுதியெடுத்துச் செயல்படுத்துவோம்.
- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.
நீங்கள் விதிவிலக்காக அல்லவா இருக்க வேண்டும்?
தனக்கு ஏற்பட்ட பாலியல் அலைக்கழிப்பிலிருந்து கடந்து, புதிய பிம்பத்தை மக்களிடம் முன்னிறுத்துவதற்காகக்கூட பாவனா அவசரமாகத் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்திருக் கலாம். ஆனால், அவரின் திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஊடகங்கள் ‘பாலியல் தொந்தரவு ஏற்பட்ட நடிகை’ என்கிற சட்டகத்துக்குள்ளேயே பாவனாவை நிறுத்துகின்றன. ஏனைய ஊடகங்களிடம் இது அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அல்ல. ஆனால், ‘நடிகை பாவனாவுக்கு நிச்சயதார்த்தம்’ என்ற செய்திக்கு அருகில், ‘பாலியல் தொந்தரவு வழக்கில் முக்கிய ஆதாரம் சிக்கியது’ என்ற செய்தியை (மார்ச் 10) ‘தி இந்து’ பிரசுரித்திருக்கக் கூடாது. நீங்கள் விதிவிலக்காக அல்லவா இருக்க வேண்டும்?
- தமிழ் பிரபா, சென்னை.
தீர்வு நம் கையில்
சரவணன் சந்திரன் எழுதிய, ‘மணல் கொள்ளையைத் தடுக்க நீங்கள் எந்த அளவுக்குத் தயார்?’ (மார்ச்-6) கட்டுரை வாசித்தேன். தமிழகத்தில் மாற்றுத் திட்ட ஏற்பாட்டுக்கு, அரசு அனுமதி வழங்கினால், மலைகளாகக் குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவுகளைப் பயன்படுத்தி ‘எம் சாண்டு’ சுலபமாக எடுக்கலாம். மணல் என்பது சிலிகா என்ற கனிமம்தான். கிரானைட் கற்களும் சிலிகா என்ற கனிமம்தான் என்பதால், கட்டிடம் ஒன்றும் ஆகாது. ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை ஆற்று மணல் வியாபாரம் என்பது அவர்களுக்குப் பணம் கொட்டும் சுரங்கம் என்ற நிலையில், ஆட்சியாளர்கள் மணல் மாற்றுத் திட்டத்துக்கு எப்படி ஆதரவு அளிப்பார்கள். தீர்வு அவர்களிடம் இல்லை; மக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.
- கே.விஜயன், தஞ்சாவூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago