விழிப்புணர்வே தீர்வு

By செய்திப்பிரிவு

சகஜமாகிப்போன நம் வன்முறை கட்டுரை படித்தேன். இந்தியாவில் காவல் துறையினரால் அப்பாவி மக்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றன, சத்தீஸ்கரைச் சேர்ந்த சுவாசி ஹித்மி, கேரளாவின் ஜிஷா ஆகியோரின் கதைகள். அதிகாரத்தில் இருப்போர் பெருந்தவறே செய்தாலும் காவல் துறை கண்டுகொள்வதில்லை. ஆனால், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், நாடோடிகளை விசாரணையே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைப்பதும், சித்திரவதை செய்யப்படுவதும் தொடர்கின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதெல்லாம் வெறும் வாய்ச்சவடால்தான். இத்தகைய நியாயமற்ற வன்முறைக்கு உட்படுத்தப்படும் அப்பாவிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மக்களிடையே விழிப்புணர்வும் எழுச்சியும் வர வேண்டும்.

- தா.சாமுவேல் லாரன்ஸ், மதுரை.



வேலியே பயிரை மேயக் கூடாது

நீதிபதி கே.சந்துரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க, வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாட்டின் நான்கு தூண்களுள் முக்கியத் தூணாக உள்ள நீதிமன்றங்களின் இரு கண்களாகத் திகழும் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சட்டத்துக்கு உட்பட்டு, மனிதநேயம் இழையோட தம் கடமையாற்றுவது அவசியம். மாறாக வேலியே பயிரை மேய்வதாக இருக்கக் கூடாது.

- பெரணமல்லூர் சேகரன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்