தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் எரிக்கப்பட்டன. இம்மாதிரி இரு மாநிலப் பிணக்குகளின்போது வாகனங்கள் சேதமுறுவதைத் தவிர்க்க, நாடு முழுவதும் வாகனப் பதிவை ஒரே மாதிரியாகப் பதிய வேண்டும். உதாரணமாக IN16 1A0001 துவங்கி, கணினி வழி பதிவுசெய்தால் மாநிலங்களுக்கு இடையே பிணக்குகள் வரும்போது வாகனங்கள் சேதமுறுவதைத் தவிர்க்கலாம்.
IN என்பது இந்தியாவையும், 16 என்பது வருடத்தையும் 1 என்பது ஜனவரியையும் A என்பது வரிசையையும், அதன் பின்னர் 0001 வண்டி எண்ணையும் குறிக்கும். எந்த மாநில வண்டி என்பது உரிமையாளருக்கு மட்டுமே தெரியும். வன்முறையாளர்களால் அறிய இயலாது.
பதிவுகளை அந்தந்த மாநிலத்திலேயே பதிவுசெய்தாலும், ஓட்டுமொத்தப் பதிவை மத்திய அரசு கண்காணிக்கலாம். டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டால் பெரும் பயன் விளையும்.
.ந.ச.நடராசன், மேல்புதுப்பேட்டை.
*
அறச் சீற்றம் இல்லையே?
காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடிக்கும் தார்மிக அறம் எவருக்கும் இல்லை. இவ்வளவு பெரிய நாட்டில் அறச் சீற்றத்துடன் பேசவும் ஒருவரும் இல்லை. அரசியலமைப்புச் சட்டப்படியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், மந்தை உணர்வுகளுக்குத் தீனி போடும் வேலையைத்தான் அரசியல் கட்சிகள் செய்கின்றன. இதனால் அராஜகமே மிஞ்சும்.
கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் பேசி தமிழகத்துக்குத் தண்ணீரும் பதிலாக கேரளத்துக்கு மின்சாரமும் பெற்றுத்தந்தார். மகாத்மா தேசப் பிரிவினையின்போது நடந்த மதக் கலவரத்தில் தனி மனிதப் படையாக இயங்கி கலவரத்தைத் தணித்தார். ஆனால் இன்று அந்த காந்திகள் எங்கே?
- ம.கதிரேசன், மதுரை.
*
காந்தியும் ஏ.கே.செட்டியாரும்
சீன யாத்ரீகர்களான யுவாங் சுவாங்கைப் போன்ற ஒரு பூகோள ஆய்வாளர் ஏ.கே.செட்டியார். அவரைப் பற்றிய கட்டுரை சிறப்பு. செல்வந்தரான அவர், தன்னடக்கத்துடன் தமது நிழலைக் காட்டாமல் சரித்திரக் குறிப்புகளை உலகுக்கு அளித்தார். சர் அட்டன்பெரோவின் ‘காந்தி’ திரைப்படம் வந்தபோது, அதுவே அண்ணல் காந்தியைப் பற்றிய முதல் திரைபடம் என எண்ணியோர் பலர்.
ஆனால், எந்தத் திரைப்படத் தொழில்நுட்பமும் வளர்ந்திராத காலத்தில் காந்தியடிகளைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரித்து உலகுக்கு அளித்தது செட்டியாரின் ஈடற்ற பங்களிப்பு. தேசப்பிதாவைத் திரையில் அலங்கரித்து உலகுக்கு வழங்கியவரை காங்கிரஸ் அரசுகூடப் பெரியளவில் கௌரவிக்கவில்லை என்பதுதான் வேதனை.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
*
கொசு வலை தரலாமே?
டெங்கு காய்ச்சல் பற்றிய மருத்துவக் கட்டுரை கண்டேன். இலங்கையில் மலேரியா ஒழிப்பு பற்றிய தலையங்கமும் கவனத்தை ஈர்த்தது. கொசுக்களால் பரவும் நோய்கள் நம்மைத் தொடர்ந்து பயமுறுத்திக்கொண்டே இருக்கின்றன. கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, ரேஷன் கடைகள் மூலமாக கொசுவலைகளும், மின்சாரக் கொசு மட்டைகளும் வழங்கலாம்.
இலவச வேட்டி, சேலை வழங்குவதுபோல இவற்றை வழங்கினால், அனைத்துத் தரப்பு மக்களும் தங்கள் பங்குக்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுப் பயனடைவார்கள்.
- எம்.எஸ்.அஹ்மத் இஸ்மாயில் நயினார், ஆழ்வார்த்திருநகரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 mins ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago