ஜல்லிக்கட்டும் அர்ச்சகரும்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஜல்லிக்கட்டு பல காலமாக நடந்துவரும் பாரம்பரிய விளையாட்டாக இருந்தால் என்ன… குழந்தைத் திருமணம்கூட அது குற்றமாக அறிவிக்கும் வரையில் நடந்துகொண்டுதான் இருந்தது’ என கருத்து தெரிவித்திருந்தது.

16.12.2015-ல் இதே உச்ச நீதிமன்றம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு கூறும்போது, பத்தி 43-ல் ‘நீண்ட காலப் பழக்க வழக்கம் என்ற கோரிக்கையானது மிக முக்கியமானது (imperative), அதன் வெளிச்சத்தில் அர்ச்சகர் நியமனம் பற்றிய அரசாணை பரிசீலிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது.

ஒரு வழக்கில் பழக்க வழக்கத்தையெல்லாம் பார்க்கக் கூடாது என்றும், இன்னொரு வழக்கில் பழக்க வழக்கம் மிக முக்கியமானது என்றும் முன்னுக்குப் பின் முரணான நிலையை உச்ச நீதிமன்றம் ஏன் எடுக்கிறது என்று தெரியவில்லை. நீதியரசர்கள் தங்கள் தீர்ப்புக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதைவிட, தங்கள் தீர்ப்பை மக்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் நாட்டுக்கு நல்லது.

- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்