இப்படிக்கு இவர்கள்: ஜல்லிக்கட்டு மிருகவதை அல்ல

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்... பாரம்பரியமாக இந்தத் துணிகரமான வீர விளையாட்டில் நமது இளைஞர்கள் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதை மிருகவதை என்று கூறுவது தவறு. வாடிவாசலிலிருந்து சீறிப் பாயும் காளைகள், மைதானத்தில் அவற்றை அடக்க வரும் இளைஞர்களை எதிர்கொண்டு ஓடிவிடுகின்றன. அதிகபட்சமாக ஒன்றரை நிமிடத்துக்குள் ஒரு காளையை அடக்குவதும் அடக்க முடியாமல் போவதும் நிகழ்ந்துவிடுகிறது. அதற்குள் ஒரு மிருகத்தை என்ன வதை செய்துவிட முடியும்? பாரம் இழுக்கும் மாடுகள் வாழ்நாள் முழுவதும் நடைப்பிணங்களாக வாழ்கின்றன.

மைசூர் காடுகளில் ராட்சச மரங்களை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு யானையும் தங்கள் ஆயுளில் சராசரியாக 30 ஆண்டுகளைக் கழிக்கின்றன. அவை அல்லவோ மிருக வதை? ஜல்லிக்கட்டுக் காளை எதுவும் விளையாட்டின்போது கொல்லப்படுவதில்லை. அவை ஊனப்படுத்தப்படுவதும் இல்லை. மாறாக, அதில் பங்குபெறும் மனிதர்களே காயங்களுக்கு உள்ளாகிறார்கள், உயிரிழக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிருகவதை நடக்கிறது என்று சொல்பவர்களில் பலர் அதைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகத்துக்கு உரியது. அகிம்சை பாராட்டி, மாட்டுத் தோலில் செய்யப்படும் பொருட்களை எந்த விதத்திலும் பயன்படுத்தாதவர்கள்கூட ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாது.

- அம்ஷன் குமார், திரைப்பட இயக்குநர்.



சர்க்கரையில்லாப் பொங்கல்!

பொங்கல் என்றாலே இனிக்கும். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் வழக்கமான இனிப்போடு இல்லை. காவிரியில் தண்ணீர் இல்லை. பருவமழை பொய்த்துவிட்டது. விவசாயமும் பொய்த்துவிட்டதால், மனமுடைந்த நம் விவசாயப் பெருங்குடி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துவிட்டனர். விவசாயிகள் சோகம் ஒருபுறம், தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தரும் வலி ஒருபுறம். மழையே இல்லாததால் இந்தக் கோடை எப்படியிருக்குமோ எனும் கவலை ஒருபுறம் எனச் சங்கடப்படுத்துகிறது சூழல். கொண்டாடியவர்கள் கொண்டாடாதவர்கள் இருவருக்கும் சர்க்கரையற்றதே இந்தப் பொங்கல்!

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.



இளைஞர்களின் முன்மாதிரி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழ்வழியில் பயின்று, பின்னர் கோவை, திருச்சியில் உயர்கல்வி பெற்று டி.சி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்து தனது அறிவு, உழைப்பு, நேர்மை, தன்னம்பிக்கை ஆகியவற்றால் இன்று ஒட்டுமொத்த டாடா குழுமத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நடராஜன் சந்திரசேகரன், பொய் மான்களைச் சுற்றி அலையும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சீரிய முன்மாதிரி. குண்டூசியும் இங்கிலாந் திலிருந்து வர வேண்டிய காலத்தில் எஃகு ஆலையை நிறுவியவர் ஜாம் செட்ஜி டாடா. மென்பொருளில் முன்னோடியாக விளங்குவது டி.சி.எஸ். பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உன்னத நிறுவனமாகத் திகழ்கின்றது. இந் நிலைக்கு அதனை உயர்த்திய சந்திர சேகரன் பாராட்டுக்குரியவர். அவருக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வது நம் கடமை அல்லவா!

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



தலைவர்கள் பின்பற்ற வேண்டும்

ஜனவரி 12-ம் தேதி ‘தி இந்து’வில் திமுக, அதிமுகவின் தற்போதைய தலைமைகள் எதிர்கொள்ளும் சவால் கள் குறித்து எழுதப்பட்டுள்ள தலையங் கம், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பாரபட்சமின்றி நடுநிலையோடு அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. இரண்டு கட்சித் தலைமைகளுக்கும் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளைத் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட தலைவர்கள் பின்பற்ற வேண்டும்.

- எம்.ஆர். சண்முகம், கோபிசெட்டிபாளையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்