தென் சீனக் கடல் மீது சீனாவுக்கு வரலாற்றுபூர்வமான உரிமை ஏதும் கிடையாது. தனது செயல்கள் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டின் இறையாண்மையை சீனா மீறியிருக்கிறது என்ற சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ‘சீனச் சறுக்கல்’ கட்டுரை சிறப்பு. இதுபோன்ற விரிவான,
வரைபடத்துடன் கூடிய முழுமையான கட்டுரை தமிழுக்குப் புதிது. இந்தத் தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகித்து, ‘இவ்விஷயத்தில் சீனாவுடன் இதுவரை மோதிக்கொண்டிருந்த வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, தைவான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தத் தீர்ப்பு புதிய தெம்பை அளிக்கும்’ என்று கூறியிருப்பது தீர்க்கமான பார்வையாகவே தெரிகிறது.
- ரா.முத்துச்சாமி, வள்ளியூர்.
*
தீவிரவாதம்
பிரான்ஸ் நாட்டில் மக்கள் கூட்டத்துக்குள் கனரக லாரியைச் செலுத்தி 84 பேரைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகின் பல நாடுகளில் தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இது வளர்ந்த, பலம் பொருந்திய வல்லரசு நாடுகளைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதை இச்சம்பவம் உறுதிசெய்கிறது. தீவிரவாதத்துக்குத் துணைபோகும் நாடுகளையும், தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் அளிக்கும் நாடுகளை உலகின் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்துவதோடு, அப்பாவி மக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காக்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்!
- அ.சிவராமன், மேட்டூர் அணை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago