இப்படிக்கு இவர்கள்: இளைஞர்களை வரவேற்போம்

By செய்திப்பிரிவு

சமீபத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போது பதிவர் ஒருவரின் கருத்து ‘என்ன நினைக்கிறது தமிழகம்?’ பகுதியில் வெளியாகியிருந்தது. அதில், ‘வட மாநிலங்களில் சமூகப் போராட்டங்களை முன்னெடுப்பவர்களாக ரோஹித் வெமுலா, கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றோர் இருக்க, தமிழ்நாட்டில் இன்னும் சினிமாக்காரர்களையே நம்பியிருப்பது ஏன்?’ என்ற கேள்வி இருந்தது. இதே தமிழ்நாட்டில்தான், கடந்த ஐந்து ஆண்டுகளாக சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, மதுவிலக்கு கேட்டுப் போராடிவருகிறார்.

பல முறை கைதாகிச் சிறை சென்றுள்ளார். காவல் துறை அத்துமீறல், ஆட்சி அதிகாரத்தின் அடக்குமுறை இவற்றை மீறி தனி ஒருவராகக் களப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். ஆனால், இவரது போராட்டத்தை நம்மில் எத்தனை பேர் அங்கீகரித்து ஆதரவு அளித்தோம்? கன்னையா குமார் மீது விழுந்த ஊடக வெளிச்சம், அவரை ஒரே நாளில் இந்தியா முழுவதும் தெரியச்செய்தது. ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள் அத்தகைய வெளிச்சத்தை நந்தினிக்குக் கொடுத்தனவா என்ற கேள்வி எழுகிறது. இனியாவது, நந்தினி போன்ற துடிப்பான இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்று ஆதரிப்போம்.

- அலர்மேல்மங்கை, சென்னை.



பரபரப்பு நோய்

பிப்ரவரி17-ம் தேதி வெளியான, ‘தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?’ கட்டுரை படித்தேன். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழக மக்களில் பெரும்பகுதியினர் சோகம், குரோதம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி மற்றும் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்தும் கதைகளால் கட்டமைக்கப்பட்ட தொடர் நாடகங்களிலிருந்து விலகி, செய்திகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால், அது மக்களை வேறுவித மனோபாவத்துக்கு அடிமையாக்கிவிட்டதை இப்போது உணர முடிகிறது. விரைவில், மக்களும் ஊடகங்களும் இந்நோயிலிருந்து விடுபட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு உரிய நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை ஒளிபரப்பவும், பார்க்கவும் இருதரப்பினரும் சிந்திப்பதற்கு இக்கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும்.

- ஜேவி, சென்னை.



உள்ளாட்சித் தேர்தல் வரட்டும்

டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய, ‘உள்ளாட்சிப் பிரதிநிதிகளின்றிச் சீரழிகிறது நிர்வாகம்... தேர்தல் எப்போது?’ (பிப்.20) காலத்துக் கேற்ற கட்டுரை. அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர்ப் பிரச்சினை தலைவிரித் தாடுகிறது. எரியாத தெரு விளக்குகள், மோசமான சாலைகள், அகற்றப்படாத குப்பைகள் - இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. முன்பு, ஏதாவது பிரச்னைகள் என்றால், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அணுகி ஓரளவுக்காவது தீர்வு கண்டனர் மக்கள். தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. அதிகாரி களுக்கும் மக்களுக்கும் எப்போதும் நீண்டவெளிதான்.

- ஏ.தரணிதரன், சென்னை.



நல்ல விஷயமா இது?

சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாக்கப்பட்டுவிட்டது. சட்டத்துக்குப் புறம்பாகப் பணமும் சொத்தும் சேர்த்தார் என்றும், அதற்குரிய தண்டனையும் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்ததாலேயே அவரது தவறுகளும் குற்றங்களும் மறைந்துவிடாது; மக்களும் மறந்துவிட மாட்டார்கள்.

இப்போது, ‘அம்மா விட்டுச் சென்ற பாதை வழியாகத்தான் நாங்கள் செல்வோம்; அதில் இம்மியளவும் விலக மாட்டோம்’ என்று அவரது விசுவாசமிக்க தொண்டர்கள் சூளுரைக்கிறார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்? பதவிகளையும், அதிகாரத்தையும் ‘ஜெயலலிதா பாணி’யிலேயே பயன்படுத்துவோம்; அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதுதானே. நல்ல விஷயமா இது?

- தா. சாமுவேல்லாரன்ஸ், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்