பிப்ரவரி 18 ‘தி இந்து’ நாளிதழின் தலையங்கத் தலைப்பு: ‘பாடப் புத்தகங்களில் நவீன கவிதைக்கு இடமில்லையா?’ இந்தக் கேள்விக்குப் பின்னால் எழுதப்பெற்றுள்ள விவரங்கள், எல்லா பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களையும் அவற்றின் கீழுள்ள தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களையும் கவனித்து எழுதப்பெற்றுள்ளனவா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஏனென்றால், இந்தக் குற்றச்சாட்டின் பகுதியில் உண்மை இருக்கலாம்; முழுமையும் உண்மையல்ல; ஏற்புடையதல்ல.
என்னுடைய அனுபவம் வேறானது. 1980-82-ல் நான் முதுகலை படிக்கும்போதே எழுத்துக் கவிதைகளும் வானம்பாடிக் கவிதைகளும் பாடத்திட்டத்தில் இருந்தன. மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சி.கனகசபாபதி, தி.சு.நடராசன் போன்றோர் உருவாக்கிய தற்கால இலக்கியம் பாடத்திட்டம் முன்னோடியான பாடத்திட்டம். நான் அதன் வழியாகவே நவீன இலக்கியத்துக்குள் விரிவாக நுழைந்தேன். பாண்டிச்சேரி பல்கலையின் நாடகத் துறையிலிருந்து விலகி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு 1997-ல் வந்தேன். 1999-ல் எங்கள் துறை மாணவர்களுக்காக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கினேன். அதில் அப்போது முதல் தொகுப்பை வெளியிட்டிருந்த என்.டி.ராஜ்குமார் வரை சேர்க்கப்பட்டனர்.
பின்னர், பொதுத் தமிழ் பாடத்திட்டத்திலும் நவீன பெண் கவிகளான கனிமொழி, சல்மா போன்றவர்கள் சேர்க்கப்பட்டனர். இப்போதும் பலரது கவிதைகளும் இருக்கின்றன. பட்டப் படிப்பில் பெண், தலித் இலக்கியங்கள் தனித் தாள்களாக ஆக்கப்பட்ட நிலையில், வந்த எதிர்ப்புகள் எல்லாம் தினசரிகளில் செய்திகளாகியுள்ளன. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக நான் போகும் இடங்களில் எல்லாம், தொடர்ந்து நவீனக் கவிதைகளைப் பாடத்திட்டத்துக்குள் சேர்க்கும்படி செய்துவருகிறேன்.
எம் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் புதுச்சேரி, வேலூர் திருவள்ளுவர், கோவை அவினாசிலிங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுக்களில் நான் உறுப்பினராக இருந்த காலங்களில் எல்லாம் அதன் இடத்தை உறுதிசெய்திருக்கிறேன்.
- அ. ராமசாமி, பேராசிரியர், முகநூல் வழியே...
கடற்கரை அரசியல்
வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய, ‘எண்ணூர் முதல் இணையம் வரை காயப்பட்ட கடற்கரை’ கட்டுரை (பிப்.19) ஆளும் வர்க்கத்தின் அலட்சியப் போக்குக்கு சவுக்கடி. விஞ்ஞான வளர்ச்சி மனித குலத்தை ஆட்கொண்டுவிட்ட பிறகு, இயற்கை மனிதனிடம் போராடித்தான் தன் இயல்பான குணங்களைக் காப்பாற்றும் சூழல் மிகவும் வேதனையைத் தருகிறது. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் கேள்வி கேட்கும் நிலையில்தான் இன்று அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. தங்கள் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று மாநில அரசும், மாநில நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகச் செயல்படும் மத்திய அரசையும் என்னவென்று சொல்வது?
- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.
சாதி உதவாது
ஜெயலலிதா இல்லாத சூழ்நிலையில், சபாநாயகரின் செயல்பாடு சற்று மேம்பட்டிருக்கும் எனப் பலரும் கருதியிருப்பர். அது ஏமாற்றமாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான உறவு மட்டுமல்ல, சபாநாயகர் மீதான நம்பிக்கையும் கெட்டுவிட்டது. இந்தச் சூழலில் இன்னும் நான்கு ஆண்டுகள் சபையை அமைதியாக நடத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். சபாநாயகர் பெரும்பாலும் ஆளும்கட்சி சார்புள்ளவர்தான். ஆனால், அரசியல்ரீதியான பிரச்சினையில் சபாநாயகர் தனது சாதியைக் கொண்டுவந்திருப்பது, ஜனநாயகத்துக்குப் பிடித்த கேடாகும். தமது நடவடிக்கைகளால் தாம் சர்ச்சைக்குள்ளாகும்போது அங்கே சாதியை முன்னிறுத்துவது சரியல்ல.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago