அரசியல்வாதிகள் ஊழல் செய்வதற்குப் பொதுமக்களாகிய நாமும் ஒரு காரணம். அரசியல் இயக்கம் என்பது தேர்தல் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்று நமக்கான திட்டங்களை வகுக்கும் ஓர் அமைப்பு. ஆனால், கட்சி நடத்தவும் தேர்தலைச் சந்திக்கவும் பெரும் நிதி தேவை. அரசியல் கட்சிகளுக்குப் பெரும் தொழிலதிபர்களே நிதியை அள்ளிக் கொடுக்கிறார்கள். எனவே, யாரிடம் நிதி பெறுகிறார்களோ, அவர்களுக்காகச் செயல்பட வேண்டிய நிலை அரசியல்வாதிகளுக்கு வருகிறது. கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்கும்முன், சில விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் அரசியல் இயக்கங்களிடம் இருந்து நாம் ஓட்டிற்குப் பணம் பெறக்கூடாது. கட்சிகளுக்கு நிதி வழங்க முன்வர வேண்டும். அரசியல் கட்சிகள் ஊதியத்துடன் கூடிய பகுதி நேர, முழு நேர நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் வேட்பாளர்களின் செலவு தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணியைச் செய்ய வேண்டும். நடக்குமா?
- க.துள்ளுக்குட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
புரியாத புதிர்
தற்பொழுது தீர்ப்பு வழங்கப் பெற்றது 1991-96-ம் ஆண்டுகளில் வருமானத்திற்கு மேல் சொத்து முறைகேடாகச் சேர்த்ததற்காகத்தான். அதன் பின்னர் 12 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரவில்லை, எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதா ஏதோ அப்பழுக்கற்றவர் போலச் சித்தரிக்கப்பட்டு வணங்கப்படுவது புதிராக இருக்கின்றது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக மட்டுமின்றி அவரது சொத்துக்களுக்கும் உரிமையை எவ்வித சட்ட அடிப்படையில்லாமலும் எடுத்துக் கொண்டுள்ளார் சசிகலா.
ஜெயலலிதா இறந்தவுடன் அவர் போயஸ் தோட்டத்தைவிட்டு வெளியேறியிருக்க வேண்டும். இவ்வளவு பிரச்சினைக்கும் பிறகும் தனது உறவினரையே துணைப் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது கட்சியின் மீது முழு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ளவே. பிற உறுப்பினர்கள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. தொடக்கம் முதலே அதிமுகவில் ஜனநாய நெறிகள் பின்பற்றப்பட்டதில்லை. இப்பொழுது கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கட்சியைச் சீர்திருத்த முயல்வது நன்மை பயக்கும்.
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை
பல தடைகளைத் தாண்டி தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்துகொண்டிருக்கிறது. காளைகள் மற்றும் மாடிபிடி வீரர்களுக்கு ஆபத்தில்லாத வகையில் பெரும்பாலான இடங்களில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது பாராட்டுக்குரியது.
அதேநேரம் சில இடங்களில் வீரர்கள் உயிரிழந்ததும், பார்வையாளர்கள் அதிகளவில் காயமடைந்ததும் அதிர்ச்சி தருபவை. நிகழ்ச்சி முடிந்தபின்னர் உரிமையாளர்கள் பிடித்துச் செல்லாததால் காளைகள் தெருக்களில் கோபமாகத் திரிவது, சில மாடுகள் கிணற்றிலோ சாலையிலோ விழுந்து காயமடைவது போன்ற செய்திகளையும் பார்க்க முடிகிறது. எனவே, ஜல்லிகட்டு நடக்கும் ஊர்களில் முன்கூட்டியே ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், திறந்தவெளி கிணறுகளைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும். பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்ல வேறு யாரையாவது அனுப்பிவிட்டு, காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது மிக மிக அவசியம். இதுபோன்ற தவறுகள் தொடர்ந்தால், ஜல்லிக்கட்டைத் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிற கூட்டத்திற்கு நாமே உதவி புரிவதாக ஆகிவிடும்.
-இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி, தஞ்சை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago