இப்படிக்கு இவர்கள்: மனிதநேயம் இல்லையா?

By செய்திப்பிரிவு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவர்கள் -நோயாளிகள் கைகலப்பும் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும் கவலை தருகின்றன. அதேசமயம், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட முடியாது. இருந்தாலும், சென்னை போன்ற பரபரப்பான ஒரு மாநகரில் உள்ள மருத்துவமனையில், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தருகிற நிலையில் உள்ள மருத்துவர்கள், தங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற மனநிலையில் நிற்பது எந்த வகையில் தர்மம்? மருத்துவர்கள் போராட்டம் என்றவுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் சென்னை காவல் துறை ஆணையரும் முன்னின்று உடனடியாகப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டாமா? மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்கள் மனிதநேயத்தை மறந்துபோவதும், படிப்பறிவு இல்லாத சில நோயாளிகள் செய்யும் தவறுக்கு அப்பாவி நோயாளிகளைப் பலியாக்குவதும் என்ன நியாயம்?

- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி.



தவறுக்குத் தவறு சரியாகாது

சங்கர்ராமசுப்ரமணியனின் ‘ஏன் இந்த வெறுப்பு?’ (மார்ச்.17) கட்டுரை படித்தேன். ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடிய பரத நாட்டியம், சமூக வலைதளங்களில் நகைப்புக்குரியதாக்கப்பட்டது, அதீதமானது என்பதில் சந்தேகமில்லை. அதுவும் மகளிர் தினத்துக்காக அவர் நடனமாடிய சூழலில், இத்தகைய விமர்சனங்களைப் பதிவிட்டது பெரும் முரண்பாடாகும். தவறுக்குத் தவறு சரியாகிவிடாது. மறுபக்கம் பார்த்தால், ஐஸ்வர்யாவும் ஒரு முன்னணி பரதக் கலைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமாறு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தகுதிக்கு மீறிய அங்கீகாரம் என்ற பொதுமக்களின் ஆற்றாமையும் ஆதங்கமுமே இந்த போக்குக்கான காரணமாகும்.

- இரா. பொன்னரசி, வேலூர்.



அறையும் உண்மை

ஆழி செந்தில்நாதனின் ‘பாகுபாட்டை அழிக்காத கல்வியால் என்ன பயன்?’ (மார்ச் 16) கட்டுரையைப் படித்தபோது, கன்னங்களில் அறை விழுந்ததுபோல் இருந்தது. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்று வாழும் பேர்வழிகளின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பொதுவெளியில் நடந்த அக்கிரமத்துக்குத் தானும் ஒரு வகையில் பொறுப்பாளி என்று அறைகூவல் விடுத்துக் கூறும் அறச்சீற்றம், நம்மில் எவருக்கும் இல்லை என்றே தோன்றுகிறது. சமூகத்தில் நடந்தேறும் அவலங்களைக் கண்டும் கடந்து போக முற்படும் பெருங்கூட்டத்தில், கட்டுரையாளரின் கருத்து மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அடுத்த நகர்வுக்கு, இதே போன்று சமூகப் பொறுப்புமிக்க இன்னொரு கட்டுரையாளருக்காகக் காத்திருப்பதை தவிர்த்து நாம் என்ன செய்திருக்கிறோம்?

- அ.பழனிச்சாமி, கோவை.



அன்புப் பூச்செண்டு

மார்ச் 17-ல் வெளியான பிரபா அரக்கனின் ‘திராவிட ஆட்சிகள் சாதித்தது என்ன?’ இணையகளக் கட்டுரை கவனம் ஈர்க்கிறது. ‘திராவிட இயக்கங்கள் எதையும் சாதிக்கவில்லை. குறிப்பாக, பட்டியல் இனத்தவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை!’ என்ற ஒரு சாராரின் பிரச்சாரத்துக்குப் பதிலுரையாக அமைந்துள்ளது சிறுகட்டுரை. கட்டுரையாளர் சொல்லியிருப்பதுபோல ‘பிற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகளின் சாதனைகளை நாம் அறிய முடியும். இச்சிறு கட்டுரைக்கும் அப்பால் வேறு பல துறைகளிலும் திராவிட ஆட்சிகள் நிகழ்த்தியுள்ள சாதனைகளைப் பற்றியும் நாம் விவாதிக்க வேண்டும்.

- வெற்றிப்பேரொளி, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்