வங்கிகளைக் காப்போம்

By செய்திப்பிரிவு

டி.டி.ராம்மோகன் எழுதிய, 'வங்கிகளுக்கு உயிரூட்டுவது எப்போது?' கட்டுரை பழுதுபடும் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவதாக இருந்தது. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் வாராக் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், வங்கிகளை இணைக்கும் பணி உசிதம் அல்ல என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.

கடன்களின் வயதுக்கேற்ப வட்டிச் சலுகைகள், ஒரே தவணையில் கடனை சிறப்புச் சலுகையோடு திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் என சில வங்கிகள் சலுகைகள் அறிவித்து, தங்களது வாராக் கடன் சுமையைக் குறைத்துக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்த வங்கிகளின் வாராக் கடன்கள் தொழில்முனைவோருக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்திவருகிறது.

ரிசர்வ் வங்கியின் சார்பில் இதற்கென மாநிலம்தோறும் சிறப்புக் குழு அமைத்து, அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் வாராக்கடன் வசூல் முறைகளை, திட்டங்களை புரிதலோடு செயல்படுத்தி ஒரு விடிவு காண வேண்டும். இதனால், பொருளாதாரம் உண்மையான வளர்ச்சி அடைவதோடு வங்கிகளும் உயிர் பெரும்.

- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்