கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்!
க
ரும்புக்கு, இந்த ஆண்டுக்கான பருவத்துக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிப்புசெய்யாமல், சென்ற ஆண்டின் எஸ்ஏபி விலையான ரூ. 2,750-ஐ, இந்த ஆண்டுக்கான எஃப்ஆர்பி ரூ. 2,550 போக மீதியுள்ள ரூ. 200-ஐ விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2013 முதல் 17 வரையிலான நான்கு பருவத்துக்கும் சேர்த்துச் சேர வேண்டிய ரூ. 2,000 கோடிக்கான அறிவிப்பு ஏதும் செய்யாமலும், இனி வரும் பருவங்களுக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரையில் மாற்றம்செய்யாமல் விலை நிர்ணயிப்பதும் கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்தானே. மேலும், கரும்பு விவசாயிகளிடையே சிறு, குறு, பெரு விவசாயிகள் என்று பாகுபாடு பார்க்காமல், முழு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம், புதிய ரகக் கரும்பு நாற்றுகளை மாநில அரசே வழங்குதல், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம், வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையான C2+50% சூத்திரப் படி கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்கும் வகையில், இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இல்லாதது.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்! மகாராஷ்டிர விவசாயிகள் திரண்டெழுந்து, மும்பையில் மிகப் பெரிய பேரணியாகச் சென்று, தங்களின் நியாயமான கோரிக்கைகளை அம்மாநில அரசுக்குப் புரியவைத்தார்கள். அந்நிலை தமிழ்நாட்டிலும் ஏற்படாதவாறு அரசு நடந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம்.
- கே.வி.ராஜ்குமார், தலைவர்,
தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (சிஸ்ஃபா) தமிழ்நாடு.
இளைஞர்களின் உந்துசக்தி
த
ன்னைப் பாதித்த கொடிய நோயுடன் 49 ஆண்டுகள் போராடியவர் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங். அவர் மறைவு குறித்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ‘நாம் ஒரு அற்புத அறிவையும், சிறந்த விஞ்ஞானியையும் இழந்துவிட்டோம்’ என்றார். பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராய்ந்து பல அரிய விஷயங்களை வெளிப்படுத்தியதில் அவரது அறிவுக்கூர்மையைக் கண்டு உலகம் வியந்தது. ‘எதைப் பற்றி நீங்கள் அதிகம் நினைத்துக்கொண்டிருப்பீர்கள்?’ என்ற ஒரு இதழின் கேள்விக்கு, ‘பெண்கள்... அவர்கள்தான் எனக்குப் புதிர்’ என்ற பதிலில் அவருடைய நகைச்சுவை உணர்வு எல்லோரை யும் ஈர்த்தது. இளைஞர்களின் எதிர்கால எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஸ்டீவன் ஹாக்கிங்கின் அறிவுரைகள் என்றென்றும் உந்துசக்தி யாக இயங்கிக்கொண்டேயிருக்கும்.
- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.
நகரவாசிகள் கண்டிராத அற்புதக் காட்சி
மா
ர்ச் - 20 தங்களுடைய நாள் என்றே தெரியாமல் ஐந்தாறு ஜோடி சிட்டுக்குருவிகள் எங்கள் கிராமத்து வீட்டில் பறந்து திரிந்து, உல்லாசப் பறவைகளாக வலம்வந்துகொண்டிருந்தன. சிட்டுக்குருவிகள் மற்ற பறவைகள்போல் மரங்களில் கூடுகட்டுவதில்லை. கிணற்றின் சுவரில் உள்ள பொந்துகளில் கூடுகட்டிக்கொண்டு கிணற்றடி யில் நாங்கள் கழுவி ஊற்றும் தானியங்கள், சோற்றுப்பருக்கை கள் மற்றும் காய்கறித் துண்டுகள் ஆகியவற்றைக் கொத்தித் தின்றுவிட்டு, பக்கத்தில் உள்ள எலுமிச்சை மரத்தில் ஜோடிஜோடியாக உட்கார்ந்து ‘கீச்சுகீச்சு’ என்று பேசிக்கொண்டிருக்கின்றன. மனிதர்களின் காலடிச் சத்தம் கேட்டவுடன் விர்ரென்று பறந்துசென்று, மின்சாரக் கம்பியில் வரிசையாக உட்கார்ந்துகொள்வது, நகரவாசிகள் கண்டிராத ஓர் அற்புதக் காட்சி. கிணறுகள் ஆழ்துளை போர்களாக மாறிவிட்டதால், குருவிகள் இடம்பெயர்ந்துவிட்டன. கிராமத்துப் பக்கம் போகாமல் சென்னை அண்ணா சாலையில் சிட்டுக்குருவிகளைத் தேடினால் காணக் கிடைக்குமா?
- வாசுகி பெரியார்தசன், மின்னஞ்சல் வழியாக.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago