பொதுத்துறை வங்கிகளின் மீது நம்பிக்கையிழக்க வைத்துவிடாதீர்கள்!
மா
ர்ச் 12 அன்று வெளியான, வங்கிகளின் தனியார்மயம்குறித்த கட்டுரை நிதர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளது. வங்கித் துறையின் ஊழல்கள் மீதான விமர்சனத்தை ஊடகங்கள் மென்மையாகவும், சில சமயங்களில் அச்செய்தியைப் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் பார்க்கிறோம். நடிகை ஸ்ரீதேவி இறந்த அன்று நீரவ் மோடியின் ஏமாற்று வேலைகள் குறித்த செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டன. சுஷ்மா ஸ்வராஜ் உதவியால் வெளிநாட்டில் உலவிய லலித் மோடி, பாஜகவின் வாக்குகளால் நாடாளுமன்ற மேலவைக்கு வெற்றிபெற்று வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பின்னரும், லண்டனில் இந்தியத் தூதரகத்துக்குத் தைரியமாக வந்து கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியோடு ஏமாற்றி, பின்னர் தொழிலதிபர்கள் என்ற வகையில் பிரதமரோடு டாவோஸ் சென்ற நீரவ் மோடி குறித்து ஊடகங்கள் பெரிய அளவில் விவாதங்களை மேற்கொள்ளவில்லை. சாமானிய மக்களின் சேமிப்புகள் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்தும் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் மெளனம் குறித்தெல்லாம் மனம் திறந்த விவாதங்கள் தேவை. ஒரே ஒரு ஆறுதல், இன்னமும் தேசிய வங்கிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே. நம்பிக்கை யிழந்து, தேசிய வங்கிகளை முற்றுகையிடும் இக்கட்டான நிலைக்கு மக்களைத் தள்ளிவிடாதீர்கள்.
- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
பொ
துத்துறை வங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கொடுத்த கடன்களை வசூலிக்க நெஞ்சுறுதி இல்லாத மத்திய அரசு, அதற்குப் பதில் வங்கிகளையே அவர் களிடம் கொடுத்துவிட்டால் என்ன என்பது போன்ற தனியார்மயக் கொள்கைகள் ஏறுக்கொள்ள முடியாதவை. ‘ஊழலைத் துளியும் சகித்துக்கொள்ள முடியாத அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் நரேந்திர மோடி அரசின் ஆட்சியில்தான், இந்த மாபெரும் ஊழலின் ஒட்டுமொத்த பலிகடாக்களாகவும் கீழ்நிலை ஊழியர்களை உருமாற் றும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது’ என்ற கட்டுரையின் வரிகளும், ‘பொதுத்துறை வசமிருந்து தனியார் கைக்கு மடைமாற்றுவதற்குப் பெயர்தான் திறமை யான நிர்வாகம்.. அந்த முடிவை எடுப்பதற்குப் பெயர்தான் நிர்வாகத் துணிச்சல் என்று எவரேனும் சொல்வார்கள் என்றால், மனம் கொதிக்கும் மக்களில் ஒருவனாக எழுது கிறேன், அவர்கள் கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மண்ணுக்குச் சமானம்!’ என்ற வரிகளும் மீண்டும் மீண்டும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
- ஆர்.முருகேசன்,
அந்தியூர்.
நினைவாற்றல் எனும் அருட்கொடை
அ ன்றாட
வாழ்க்கைக்குப் பயனுள்ள வகையில் இருந்தது, ‘நினைப்பதெல்லாம் மறந்துவிட்டால்’ கட்டுரை. மறதிக்கான முக்கியக் காரணம் ஆர்வமின்றிக் கேட்பது. காட்சிகளைச் சங்கிலித் தொடர் போல் கட்டமைத்துக்கொள்வதால் எளிதில் மறக்காது. நாவல்கள் படிக்கும்போது காட்சிப்படுத்துவதால் மறப்பதில்லை. கற்பனையின்றி பாடப்புத்தகம் படிப்பதால், மூளை சோர்வுற்று எளிதில் மறந்துவிடுகிறது. நினைவாற்றலுக்குப் பெரும் தடையாய் இருப்பது கவனச்சிதறல். மூளையை நாம் குறுகிய கால நினைவாற்றலுக்கு மட்டும் பழக்கப்படுத்துவதால், நீண்ட காலத்துக்குச் சேமிப்பதில் அது தயாராவதில்லை. கருவி இன்றி மனக் கணக்குப் போடுதல், பெரும் செய்திகளைத் தொடர்புபடுத்துதல், தெரிந்ததை மற்றவர்க் குப் பகிர்தல், மற்றும் சரியான இடைவெளியில் அடிக்கடி நினைவுகூர்ந்தால் மறக்காது என்கிறார்கள் வல்லுநர்கள். நினைவாற்றல் என்பது மனிதனுக்குக் கிடைத்த மகத்தான கொடை. அதைத் தொழில்நுட்பங்கள் சிதைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago