வணிகப் பயன்பாட்டுக்காகநீர் உறிஞ்சப்படுகிறது
‘கோ
டைகால குடிநீர் பிரச்சினையைச் சமாளிக்கத் தயாராக உள்ளதா தமிழகம்?’ (மார்ச் 27) கட்டுரையில் சென்னை உட்பட 21 மாவட்டங்களின் நிலைமை பற்றிய தொகுப்பைப் படித்தேன். தேனி மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. நெருங்கிவிட்ட குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும், ஊதாரித்தனமான, கட்டுப்பாடற்ற குடிநீர் விரயம் மறுபுறமும் நடந்துகொண்டுதான் உள்ளன. திருமண மண்டபங்கள், உணவகங்கள், ஆடம்பர விடுதிகள் நிறைந்துள்ள நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் ஆயிரம் அடிக்குக் கீழேகூட சென்று நீரை வணிகப் பயன்பாட்டுக்கு உறிஞ்சுகிறார்கள். விற்பனைக்காகக் கிராமங்களில் ராட்சத பம்புசெட்டுகள் மூலம் நீரை உறிஞ்சுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் அரசால் முடியும். உறியப்படும் போர் செட்டில் மீட்டர் பொருத்தி அளவைக் கண்காணித்து அதை வரைமுறைப்படுத்தலாம். மழை நீர் சேமிப்பை ஜெயலலிதா அரசு கட்டாயமாக்கியதன் மூலம் நல்ல பலன் கிடைத்தது. தண்ணீர் வள சேமிப்பில் அரசு முழுமையாக ஈடுபட வேண்டிய காலம் இது!
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா?
கா
விரி பிரச்சினை குறித்து ஆர்.முத்துக்குமார் எழுதிய ‘காவிரி பிரச்சினை: உருவாகாத மேலாண்மை வாரியமும் உருவாகும் மேற்பார்வை ஆணையமும்!’ கட்டுரை (மார்ச் 27) வாசித்தேன். பல ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட ‘திட்டம்’ என்பது என்ன என்பதற்கு, ஆளுக்குஆள் அவரவர்களுக்குச் சாதகமான கண்ணோட்டத்தில் அணுக வாய்ப்பு உருவாகிவிட்டது. மத்திய அரசுக்கு ஒரு சாக்காகக் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு அமைந்துவிட்டது. இரு மாநிலங்களுக்கும் நடுநிலையாக இருக்க வேண்டிய மத்திய அரசு தேர்தல் லாபங்களைப் பார்க்காமல் மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வர வேண்டும்!
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
கடிதம் எனும் பொக்கிஷம்
‘கா
ற்றில் கரையாத நினைவுகள்’ தொடரில், கடிதாசி குறித்து வெளியான கட்டுரை அருமை. கடிதம் எழுதுதல் தனிக் கலை. பிறந்த நாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறுவதில் சுவாரஸ்யம் கூட்டின கடிதங்கள். ஒவ்வொரு வீட்டின் வாயிற்கதவிலும் தபால் பெட்டி வைப்பதே கடிதத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தான் கண்ட காட்சிகளை அப்படியே எழுத்தில் வடிக்கும் வல்லமையைக் கடிதம்தான் நமக்கு முதலில் தந்தது. எல்லாப் பக்கமும் எழுதிய பிறகும் ‘மற்றவை அடுத்த கடிதத்தில்...’ எனத் தொடர்கதை போல் தொடரும். இன்று தபால் பெட்டிகளில் கடிதத்துக்குப் பதிலாக பால் பாக்கெட்டுகள் மட்டும் கிடக்கிறது. காலம் எதையும் நீடிக்க விடுவது இல்லை என்பது நிதர்சனம். ‘நினைவுகொள்வதே சந்திப்பதன் இன்னொரு வடிவம்தான்’ என்பார் கலீல் ஜிப்ரான். அவ்வகையில் நினைவை மீட்டளித்தது போல் இருந்தது வெ. இறையன்புவின் இக்கட்டுரை.
-ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
கடனில் தள்ளாடும் தமிழகம்
மா
ர்ச் 26 அன்று ‘வணிக வீதி’யில் வெளியான தமிழக பட்ஜெட் கட்டுரையைப் படித்ததும் ஒரு கேள்வி எழுகிறது. ஏற்கெனவே ரூ. 3.55 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. 2018-19-ல் மேலும் ரூ. 43,962 கோடி கடன் வாங்க உத்தேசித்துள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உற்பத்திச் செலவு குறைவான, புதுப்பிக்கக்கூடிய, மாசு இல்லாத மின்சக்திகளான சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் பதில், அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கவேண்டிய அவசியம் என்ன? மாசு உண்டாக்கக்கூடிய அனல் மின்சார உற்பத்தியை அதிகரித்து தமிழகத்தை மேலும் கடன்சுமையில் தள்ளுவது சரிதானா?
என். பாலகிருஷ்ணன், கோயம்பத்தூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago