இப்படிக்கு இவர்கள்: காங்கிரஸின் தடுமாற்றம் பாஜகவுக்கு வெற்றியாகிறது

By செய்திப்பிரிவு

காங்கிரஸின் தடுமாற்றம் பாஜகவுக்கு வெற்றியாகிறது

டுநிலையோடு சிந்திப்பவர்களில் பெரும்பாலானோருக்குத் திரிபுராவில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்வி அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம்தான். எனினும், மாணிக் சர்க்கார் போன்ற நேர்மையாளர்களின் ஆட்சிகூட தோல்வியைத் தழுவுகிறது என்பது ஆச்சரியம் தருகிறது. ஆளும் கட்சியாக 25 ஆண்டுகள் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட 45% வாக்குகளைத் தக்கவைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் தனது வாக்கு சதவீதத்தை முழுமையாகவே இழந்துள்ளது. அதன் வாக்குகள் முழுமையும் பாஜக வாக்குகளாக மாறி அதை வெற்றிபெற வைத்துள்ளது. காங்கிரஸின் கொள்கைத் தடுமாற்றம்தான் பாஜக வெற்றிக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்துள்ளது. மாணிக் சர்க்கார் அரசின் மீது பெரிய ஊழல் அல்லது முறைகேடு அல்லது மக்கள் விரோத நடவடிக்கைகள் இருந்ததாக எவராலும் குற்றச்சாட்டுகளைக் கூற முடியவில்லை.

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

யாழ்ப்பாண நூலகம்போல்

இன்னொன்று வேண்டும்

ல்வியின் முக்கியத்துவம் பற்றிப் பேசும் இந்நாளில் கல்விக்கும் நூலக வளர்ச்சிக்கும் ஆட்சியாளர்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. அறிவு வளர்ச்சி மட்டுமின்றி மொழி வளர்ச்சிக்கும் நூலகங்கள் அதிகம் பங்காற்றும். பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் அவ்வப்போது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை அறிவோம். தமிழ் வளர்ச்சித் துறையும் உலகத் தமிழ்ச் சங்கமும் இந்நோக்கில் சிறந்த பணியாற்ற முடியும். சமீபத்தில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை விழாவில், யாழ்ப்பாண நூலகம் இருந்தது போல தமிழ் இருக்கையுடன் பிரமாண்ட அளவில் அங்கு நூலகமும் அமைக்கப்பட வலியுறுத்தப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்திலும் அங்கத்தினர்களை அதிகப்படுத்துவதிலும், புத்தகங்களை அதிகப்படுத்தி அடிப்படைத் தேவைகளுடன் அதனை முறைப்படுத்தி நடத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

- எம். மணிவேல், மின்னஞ்சல் வழியாக…

மாணவர் தற்கொலையைத்

தடுக்க வேண்டும்

தி

ருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்டது வருத்தம் கொள்ளச் செய்தது. மாணவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் ஆசிரியர் ஒருவர் மற்ற மாணவர் முன்னிலையில் தன்னை புனைபெயர் இட்டு அழைத்ததால் மனம் உடைந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதே கடிதத்தின் இறுதியில், தமிழ் ஆசிரியரைக் கடைசியாகப் பார்க்க முடியாமல் போனதாக தனது வருத்தத்தையும் பதிவுசெய்துள்ளார் அந்த மாணவர். இந்தச் செய்தியில் உள்ளடங்கியுள்ள மாணவர் உளவியலைப் புரிந்துகொள்ள ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும். பிடிக்காத ஒன்றைக் காரணம் காட்டி, தங்கள் உயிரையும் மாய்த்துக் கொள்ளத் துணியும் மாணவர்களிடம், பிடித்த பல விஷயங்களுக்காக வாழ வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்த்த வேண்டும்.

- ரங்கன்.அய்யாசாமி, தொடக்கப் பள்ளி ஆசிரியர், பல்லடம்.

வெற்றிக்கு உதவியவர்களை

கெளரவிப்போம்!

ட்டாக் நகரில் நடைபெற்ற தேசிய மகளிர் கால்பந்தாட்டப் போட்டியில், மணிப்பூர் அணியை வென்று வரலாறு படைத்திருக்கிறது தமிழக மகளிர் அணி. சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடிவரும் வீராங்கனைகள் நிறைந்த மணிப்பூர் அணியை, நந்தினி தலைமையிலான நமது அணியினர் தோற்கடித்துள்ளனர் என்பது தமிழ்நாட்டுக்கு மிகவும் பெருமிதமான செய்தியாகும். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் மாரியப்பன், முருகவேந்தன் ஆகியோரையும் மாநில அரசு கெளரவிக்க வேண்டும்!

- நா.புகழேந்தி, பழனி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்