இப்படிக்கு இவர்கள்: நாறும்பூநாதனே.. ஈசனே

By செய்திப்பிரிவு

சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத் தலைவர்,

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.

நாறும்பூநாதனே.. ஈசனே..

ங்கத் தமிழரின் அகவாழ்விலும் புறவாழ்வி லும் மலர்கள் இன்றியமையாத குறியீடாய் அமைகின்றன. 99 அரிய மலர்களை அழகாகக் காட்டும் குறிஞ்சிப் பாட்டில் ‘நந்தி நறவம்’ என்று கபிலர் குறிப்பிடு கிறார். அதற்கு உரைதந்த நச்சினார்க்கினியர் நறைக்கொடி என்று விளக்கம் தந்தார். நறை என்றால் மணம். பழந்தமிழர் மாட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் நறைக்கொடியைச்சுற்றிப் படரவிட்டு வளர்த்திருக்கிறார்கள். கையில் உள்ள கோலால் நறைக் கொடி யைத் தட்டி மணம் பெறுவர். ஏறுதழுவுதலின் போது காளையின் கொம்பில் நறைக்கொடியைச் சுற்றி வாடிவாசலுக்கு அனுப்புவர். வையை ஆற்றில் புதுப் புனல் பெருக்கெடுத்து ஓடி வரும் போது அந்நதி நறுமணம் சுமந்துவந்தது. அதில் நீர்ப்பூ, நிலப்பூ, கோட்டுப் பூ, கொடிப்பூ எனும் மணம்வீசும் மலர்களும் மிதந்து வந்ததே நதியின் நறுமணத்துக்குக் காரணம் என்று பரிபாடல் விளக்கு கிறது. திருநெல்வேலி வீரவநல்லூர் அருகில் தாமிரபரணிக் கரையில் மருதமரப் பூக்களின் நாற்றத்தை நுகர்ந்து அருள்பாலிக்கும் ஈசனைக் கருவூர்ச்சித்தர் ‘நாறும்பூநாதனே’ என்று அழைத்ததாகப் பட்டினத்தார் பாடல் குறிப்பு உள்ளது. அழகான தமிழ்ச் சொல் நாற்றம் என்பது. இன்று துர் என்ற முன்னொட்டு சேர்ந்து துர்நாற்றம் என்று எதிர்மறை யாய் மாறியது காலக் கொடுமைதான்.

ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

வாக்குவங்கியைக் கல்வி நிர்ணயிக்குமா?

அரசுப் பள்ளிகளின் அவலநிலையைச் சுட்டி, அதனைத் திருத்த மக்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று பேரா. வசந்திதேவி கூறியுள்ளார். கல்வியைத் தனியார்மயப்படுத்தல் அரசினுடைய அறிவிக்கப்பட்ட கொள்கை. எம்.ஜி.ஆர். பொறுப்பேற்றதும் வெளியிட்ட முதல் அறிவிப்பே அரசு கல்லூரிகள் தொடங்காது, அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு அனுமதியளிக்காது. இனி எல்லாம் சுயநிதிக் கல்லூரிகளே என்பதுதான். இதனை நர்சரி வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரை விரிவுபடுத்தியதன் விளைவே அரசுக் கல்விக்கூடங்கள் மதிப்பிழந்து நிற்கக் காரணம். ஆக, மக்கள் போராட்டம் அரசின் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தே இருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டமும் தரமான கல்வி அளிப்பதை அரசின் முழுமுதற் கடமையென அறிவிக்காது, தனியாருடனான கூட்டுப் பொறுப்பாகவே கூறியுள்ளது. கல்வி என்று வாக்கு வங்கியை நிர்ணயிக்கின்றதோ அன்றுதான் அனைவர்க்கும் தரமான கட்டணமற்ற கல்வி என்ற கனவு மெய்ப்படும்.

சா.விஜயராஜ், கும்பகோணம்.

பிளாஸ்டிக் இல்லா பொற்காலம்

செய்தித் தாள்களையே அழகாக மடித்து ஒட்டி பைகளைத் தயாரித்துக் கடைகளில் பயன்படுத்திய காலத்தைப் பொற்காலம் என்றே கூற வேண்டும். நாம் பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்வதே எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தித் தந்த பெருமையைப் பெற்றவர்களாவோம். ‘பிளாஸ்டிக் பொருட்களுக் குத் தடை : பாராட்டுக்குரிய நடவடிக்கை’ தலையங்கம் (ஜூன் - 7) படித்தபோது இது நினைவுக்கு வந்தது.

பட்டவராயன், திருச்செந்தூர்.

பாராட்டுக்குரியவர்கள்!

எல்லா துறைகளிலும் மனிதநேயம் படைத்த நல்லவர்கள் பலர் உள்ளனர். அதற்கான சான்றுதான் பெங்களூரில், பிறந்து ஓரிரு மணித் துளிகளில் குப்பைத் தொட்டியில் கைவிடப்பட்ட பச்சிளம் சிசுவைப் பத்திரமாக மீட்ட உதவி ஆய்வாளர் நாகேஷும் அதை தன் குழந்தையாகப் பாவித்து தாய்ப்பால் கொடுத்துக் காப்பாற்றிய பெண் காவலர் அர்ச்சனாவும். இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்