ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
ஒற்றைக்கட்சி அவை எனும் போக்கு
மாற வேண்டும்!
மே
31 அன்று வெளியான ‘விவாதக்களம் ஆகட்டும் சட்ட மன்றம்’ தலையங்கம் ஆக்கபூர்வமான அரசியல் விவாதத்துக்கு முகமன் கூறினாலும் இன்றைய ஆட்சியாளர்களின் மன இறுக்கத்தை அது நெகிழ வைக்குமா என்பது சந்தேகமே. விவாதத்தின் நோக்கம் வெற்றியோ, தோல்வியோ அல்லாமல் அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்வது என்ற கருத்து தமிழக சட்ட மன்றத்தில் அடிபட்டுப்போய் வெகு நாட்களாயிற்று. எந்த விவாதத்தையும் தொடங்கிய உடனே பழமை பேசி, மனதைப் புண்ணாக்கி சட்ட மன்ற புறக்கணிப்பு வரை கொண்டுபோய்விடுகிறார்கள். கேட்க எதிர்க்கட்சியில்லாத நிலை அவர்களுக்கு வேண்டும். தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லியும் அதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். சட்ட மன்றம் மட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில்கூட ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. சட்ட மன்றத்தில் இவ்வாறு பயனுள்ள விவாதங்களை நடத்த முடியாத நிலையில் சட்டமாகவும் நெறிமுறையாகவும் உருவாகக்கூடிய பொதுக்கருத்துகள் உருவாக முடிவதில்லை. வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நெறிப்பதற்கு துணைபோகும் சூழ்நிலை அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் காணப்படுகிறது. காமன்வெல்த் சபாநாயகர்கள் ஃபாரம் என்ற அமைப்பும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து சபாநாயகர்கள் ஜனநாயகப் பாதுகாவலர்களாக இருக்கும் வகையில் அவர்களது அதிகார வரம்புகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அது நடக்காதவரை ஒற்றைக்கட்சியுடைய அவையாகத்தான் சட்ட மன்றம் செயல்படும். அங்கு ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறாது. இந்நிலையை மாற்ற அறிவுஜீவிகள் குரல்கொடுக்க வேண்டும்.
பொன். குமார், சேலம்.
வஉசி குறித்த அரிய தகவல்!
ஆ
ங்கிலேய ஆட்சியை விரட்டுவதில் தமிழர்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. குறிப்பாக, வஉசியின் போராட்டம். ஆங்கிலேயருக்கு எதிராக வஉசி எத்தகைய தீவிரத்துடன் போராடினார், என்ன தண்டனைகளை அனுபவித்தார் என்பது அனைவரும் அறிந்த வரலாறு. அவர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ‘மரணம் ஒரு கலை’ மூலம் கவிஞர் அ.வெண்ணிலா விளக்கியுள்ளார். சிறையில் பட்ட துன்பங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணத்தின் தருவாயில் இருந்த பாரதியின் பாடல் கேட்ட அவரின் சுதந்திர தாகம் ஆச்சரியப்பட வைக்கிறது. சிறையில் துன்பப்பட்டபோதும் காங்கிரஸ்காரர்கள் உதவவில்லை என்பது இறந்த பின்னும் சிலைவைக்க காங்கிரஸ் நிதி தரவில்லை என்பதும் கவனிக்கத்தகுந்த தகவல்கள்.
தஹிர், மின்னஞ்சல் வழியாக...
மக்கள் நலனே பெரிது!
‘எ
ப்போது ஓட்டுவீர்கள் அந்த்யோதயா ரயிலை?’ கட்டுரை வாசித்தேன். அரசு கொண்டுவரும் பல முக்கியமான திட்டங்கள் இப்படி முடங்கிப்போவது மிகுந்த வருத்தமளிக்கிறது. யாரோ பலன்பெற ரயில்வே நிர்வாகம் ஏன் இத்தனை கரிசனம் காட்ட வேண்டும்? அரசு சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மக்கள் நலன் சார்ந்து இருப்பதுதான் ஆரோக்கியமான சூழலுக்கு வழிவகுக்கும். சமீபகாலங்களில் தனியார் பெருநிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் எல்லாம் நடைபெறுவது மாபெரும் சாபக்கேடு.
இளங்குமரன், மின்னஞ்சல் வழியாக.
காப்புரிமையின் அவசியம்!
மே
30 அன்று வெளியான ‘இந்தியாவில் மருந்து காப்புரிமை முறைப்படிதான் வழங்கப்படுகிறதா?’ கட்டுரை மிக முக்கியமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. தொடர்புள்ள துறையினர் இதனைப் படித்துப் புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago