கடவுளின் தேவை இன்னும் நீடிக்கிறது!
ஜூ
ன் - 20 இதழில் வெளியான ஞானியின் நேர்காணல் வாசிப்பு மகிழ்வூட்டியது. பாசாங்கற்ற, சமரசமற்ற தெளிவான கருத்துகளோடு இவர் முன்வைக்கும் வாதங்கள் மறுப்பதற்கு இயலாதவையாக உள்ளன. மார்க்ஸியர்களும் பெரியாரிஸ்ட்டுகளும் மதத்தை யும் கடவுளையும் முற்றாக நிராகரிப்பதுபோலவே இவரும் நிராகரித்தாலும் அவற்றின் தேவை இன்னும் நீடிக்கிறது என்று அவற்றின் இருப்பை ஞானி அங்கீ கரிக்கிறார். பெரியாரின் கடவுள் ஏதிர்ப்பு, மத எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு எல்லாமே சமத்துவத்துக்கான முழக்கம்தான் என்பதை உணர்ந்து, அந்தப் புள்ளியில் பெரியாரை மார்க்ஸோடு இணைக்கிறார். ஆனால், இங்குள்ள மார்க்ஸியர்கள் இதை உணராததாலேயே அவர்கள் தோல்வி காண நேர்ந்தது என்பதையும் தெளிவாக்கு கிறார். ஞானி காண விரும்பும் தமிழ்த் தேசியம் ‘தமிழ் நாகரிகத்தின் ஆட்சி. இங்கு ஏகாதிபத்தியம் இல்லை. தமிழ் அறம்தான் அதன் மூச்சு. பல தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகும் பொருட்களுக்கு மாற்று இதில் உள்ளது. அதன் அடிப்படைக் கூறுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன’ என்னும் இவரது சிந்தனை வரவேற்கக்கூடியது.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
இயற்கைக்கு ஈடாக இல்லை
ஜூ
ன் - 21 செல்வ புவியரசன் எழுதிய ‘வனங்களின் உயிர் தின்னும் பசுமை வழிச்சாலை’ என்ற கட்டுரையைப் படித்தேன். அடர்ந்த காடுகளை இயற்கை அமைப்புக்கு இணையாக உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை அறியாமல் அமல்படுத்தும் திட்டம்தான் இந்த ‘பசுமை வழிச்சாலை’. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒதியம் என்ற கிராமத்துக்கு அருகில், மிகப்பெரிய பரப்பளவில் இயற்கை வளம் நிறைந்த காடுகளில் வாழ்ந்த விலங்குகள் ஜிப்சம் வெட்டியெடுக்க அரசு அனுமதியளித்தபோது, மனித நடமாட்டத்தால் அழிந்தன. பல பகுதிகள் அழிக்கப்பட்டன. ஜிப்சம் கிடைப்பது நிறைவடைந்தவுடன் அப்பகுதியில் செயற்கை முறையில் காடுகள் வளர்க்கப்பட்டன. ஆனால், அது இயற்கைக் காடு களுக்கு ஈடாகவில்லை. இயற்கை வளங்களைக் காப்போம், வேளாண்மையை வளர்ச்சியடையச் செய்வோம். அரசின் திட்டத்தால் பயன்பாடுகளைக்காட்டிலும் பாதிப்பு விஞ்சி நிற்கக் கூடாது என்பதே மக்களின் எண்ணம்.
-முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.
வேண்டாம் தலைக்குனிவு செயல்
ப
ழனியில் வயதான பெற்றோரைக் கைவிட்ட மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்த சார்பதிவாளரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மகன், மகள் போன்றோர்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும். வயதான நிலையில் இருக்கும் தாய் - தந்தையரைக் கவனிக்க மறுப்பது அல்லது மறப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பள்ளிகளிலிருந்தே குழந்தைகளுக்கு குடும்ப உறவுகளை, கூட்டுக் குடும்பத்தின் சிறப்புகளைப் பயிற்றுவித்தல் வேண்டும். அப்போதுதான் நாளைய சமுதாயத்தில் நல்ல பலனைப் பெற முடியும்.
-சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.
பகவான் போற்றுதலுக்குரியவர்
ஆ
சிரியர் பணியை அறப் பணியாகக் கருதி, மாணவர்களிடையே பேரன்பை விதைத்து, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிவரும் திருவள்ளூர் மாவட்ட வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பகவான் மிகவும் போற்றுதலுக்குரியவர். வேறு ஒரு அரசுப் பள்ளிக்கு பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்து அவரைப் பிரிய மனமில்லாமல், மாணவர்கள் கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது.
-அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago