இப்படிக்கு இவர்கள்: என்றும் தேவைப்படுவார் செலமேஸ்வர்

By செய்திப்பிரிவு

மருதம் செல்வா, திருப்பூர்.

என்றும் தேவைப்படுவார் செலமேஸ்வர்

ய்வுபெற்றுச் செல்லும் நீதிபதி செலமேஸ்வரின் ஜனநாயகக் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையில், ச.கோபாலகிருஷ்ணனின் ‘சென்றுவாருங்கள் செலமேஸ்வர்!’ (மே - 21) கட்டுரை அமைந்திருந்தது. புனிதம் என்று கருதப்படும் எந்த ஒரு அமைப்புக்குள்ளும் நடக்கும் நிகழ்வுகள் புதிர்த் தன்மை உடையனவாகவே உள்ளன. வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளனைவிட, அமைப்புக்குள்ளே இருப்பவர்களுக்கு அதன் உள் இயக்கத்தை அறிவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அமைப்பை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் சுயநலனைப் புறந்தள்ளிவிட்டு, அதற்குள் நிகழ வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தே அதிகமும் கவலைப்படுவார்கள். அப்படி, நீதித் துறை குறித்து அதீத அக்கறை கொண்டவர்களுள் ஒருவராகத்தான் நீதிபதி செலமேஸ்வர் விளங்கினார். நீதித் துறையில் சர்வாதிகாரத்தின் அடியாட்கள் புகுந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் ஒரு ஜனநாயகவாதியாகவே அவர் நீதித் துறைக்குள் இயங்கிவந்தார்.

இத்தகைய ஜனநாயகவாதி ஒருவரின் குரல் ஓய்வுக்குப் பின்னும் தொடர்ந்து ஒலிக்க வேண்டியது காலத்தின் தேவை. நாட்டில் சமூக நீதியும் மனித உரிமைகளும் நிலைநிறுத்தப்படவும் அதற்கு அடிப்படையாக உள்ள இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கப்படவும் அவர் தொடர்ந்து சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

தொடக்கக் கல்விக்கு வேண்டும் இயக்ககம்

ல்வி அமைப்பில் மிக முக்கியமான பகுதி தொடக்கக் கல்வி. மிக அதிகமான மாணவரைக் கொண்ட தொடக்கப் பள்ளிகளின் செயல்பாடு அவர்களது எதிர்காலத்தை உறுதிசெய்யும். தரமான தொடக்கக் கல்வி கிடைக்கப் பெறுபவர் தங்குதடையின்றி, யாருடைய தயவுமின்றி வாழ்க்கையில் முன்னேற முடியும். தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் இடம்பெற ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர் பதிவுசெய்து கொண்டிருப்பதும் தரமான கல்வியை வேண்டியே. அதனைப் பொதுப் பள்ளிகள் மூலம் தர வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எங்கள் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்ற உறுதியை அமைச்சரோ அதிகாரிகளோ தர இயலாது இருப்பது வேதனைக்குரியது. இத்தருணத்தில் நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் பிற நிலைக் கல்வியோடு தொடக்கக் கல்வியையும் பிணைப்பது பிற்போக்கானது. கல்வி உரிமைச் சட்டம் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட தனியாகத் தொடக்கக் கல்வி இயக்ககம் இயங்குவது அவசியமாகும்.

எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

நாகரத்தினம்மாவுக்கு நினைவாஞ்சலி

ண்ணனின் புகழ் பாட மீரா வாய்த்ததுபோல் நாதப்பிரம்மம் தியாகராஜரின் புகழ் பாட வாய்த்தவர் நாகரத்தினம்மா. அவருடைய உலகம் கனவுகளாலும் போராட்டங்களாலும் நிரம்பியது. விதிமுறைகளை மீறி புது விதிமுறைகளை வகுத்தவர். ‘வெற்றி -தோல்வியல்ல.. போராட்டமே என் இலக்கு’ எனச் சொன்னார். பாழ்பட்டுக் கிடந்த தியாகராஜரின் சமாதியைத் தன் சொத்தனைத்தையும் கரைத்து, இசைக் கோயில் கட்டியவர். ஆணாதிக்க சமூகம், பெண்கள் தியாகராஜ சமாதியின் முன்பு பாடக் கூடாது எனத் தடை விதித்தபோது, நாகரத்தினம்மா பெண்களை அழைத்துவந்து பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடச் செய்தவர். திருவையாறில் வருடந்தோறும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பாட வித்திட்டவரும் இவரே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்