இப்படிக்கு இவர்கள்: ’கோட்டார்ட் விண்வெளி மைய’த்தின் அபாய அறிவிப்பு!

By செய்திப்பிரிவு

கே.ராமநாதன்,

மதுரை.

‘கோட்டார்ட் விண்வெளி மைய’த்தின் அபாய அறிவிப்பு!

அமெரிக்காவின் ‘நாசா விண்வெளி மைய’த்தின் கீழ் செயல்படும் ‘கோட்டார்ட் விண்வெளி மைய’த் தின் நன்னீர் பற்றிய அறிக்கை அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்தியாவில், முக்கியமாக வட மாநிலங்களில் நிலத்தடி நீர் அபாய நிலைக்கும் கீழ் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுவது, நன்னீருக்காக வரும் நாட்களில் நாம் பெரிதும் அல்லாடப்போவதை உணர்த்தும் அபாய அறிவிப்பாகக் கருத வேண்டி உள்ளது. என்னதான் மரங்களை வளர்த்து, காடுகளைப் பெருக்கி மழையை வரவழைக்க நாம் போராடினாலும், பெருகிவரும் மக்கள்தொகை, சுற்றுச்சூழலைப் பாழடிக்கும் நவீன வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளும்போது, தண்ணீர்ப் பஞ்சம் நமக்குச் சவாலான ஒரு விஷயமாக உள்ளதை உணர வேண்டும். நீர் மேலாண்மை ஒன்றே இந்த பூதாகாரமான பிரச்சினைக்குத் தீர்வாக அமையும். தண்ணீரைச் சிக்கனமாகச் செலவிடல், நீராதார நிலைகளை மேம்படுத்துதல், கிடைக்கும் நீரை மாசுபடாமல் பாதுகாத்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற ஆக்கபூர்வ மான பணிகளை இனியும் தாமதமின்றிச் செயல்படுத்துவது ஒன்றே நீர்ப் பிரச்சினை களிலிருந்து நம்மை ஓரளவேனும் காக்கும்.

சி.ராபர்ட், மின்னஞ்சல் வழியாக…

ஸ்டார்பக்ஸும் இந்து தமிழும்!

மெரிக்காவில் ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடையில், நியாயமே இல்லாமல் கறுப்பின இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. கடையில் எதையும் வாங்காமல் கழிப்பறையைப் பயன்படுத்த முயன்றார்கள் என்ற காரணத்துக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். இதற்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடக்கவும் ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனம் ஆக்கபூர்வமான எதிர்வினையாற்றியது. நேற்றைய தினம் ‘கடைக்கு வருபவர்கள் எதையும் வாங்காவிட்டாலும், அங்கு அமர்ந்து பேசலாம். கழிப்பறையைப் பயன்படுத்தலாம். எதையும் வாங்காவிட்டாலும் அவர்கள் வாடிக்கையாளர்களாகவே கருதப்படுவார்கள்’ என்று அந்நிறுவனம் அறிவித்திருப்பதை அமெரிக்க ஊடகங்களில் படித்தேன். இந்தச் செய்தியைப் படித்தபோது மே 18 அன்று வெளியான ‘ரஜினி அரசியலின் பேராபத்து’ கட்டுரை நினைவுக்கு வந்தது. உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ் மக்கள் வாழ்வோடு அவற்றைப் பொருத்திக் கொடுப்பதில் நம்முடைய பத்திரிகைக்கு இணையே இல்லை. வாழீ!

சத்திவேல் ஆறுமுகம், கோபிசெட்டிபாளையம்.

பாலகுமாரன் வழி பெற்றவை

பா

லகுமாரனை நான் கண்டடைந்தது புத்தாயிரமாண்டின் (2000) துவக்கத்தில். ‘முன்கதைச் சுருக்கம்’ எனும் அவரின் சுயஅனுபவ நாவலே முதலில் வாசித்தது. கல்லூரியில் பயின்றுகொண்டிருந்த காலம் அது. வாழ்வின் விசித்திரங்களால் மனது தத்தளித்துக்கொண்டிருந்தபோது, பாலகுமாரன் நெருக்கமான அருவ நண்பராக வாய்த்தார். இரண்டு ஆண்டுகளில் அவர் எழுதிய பெரும்பான்மையான நாவல்களைத் தேடித் தேடி வாசித்தேன். சமூகத்தின் சகல தளங்களிலும் வாழும் மனிதர்களை மிக நெருக்கத்தில் கவனிக்கும் வாய்ப்பை பாலகுமாரனின் எழுத்துகள் வழியாகவே பெற்றேன். எவ்விதத் தனிப்பட்ட சித்தாந்தத்தையும் தன் நாவல்களில் அவர் முன்மொழிந்ததே இல்லை. வாழ்வின் முரண்பட்ட போக்குகளைத் தன் நாவல்களின் காட்சிகள் வழி விரித்தபடியே செல்வது அவரின் தனித்துவம். ஒரு வாசகனின் வாழ்வை அவனே சுயஆய்வு செய்துகொள்ளத் தூண்டுகையாக அவரின் எழுத்துக்கள் இருந்திருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்