கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
உயர்வுக்கு வழிகாட்டும் நாளிதழ்!
இ
ந்து தமிழ் நாளிதழ் - கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ பயிலரங்கம் பற்றிய செய்தி போட்டித் தேர்வர்களுக்குப் பொக்கிஷம். இந்து தமிழ் நாளிதழ் போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அற்புதமான வழிகாட்டி. 30 ஆண்டு களுக்கு முன்பு இப்படியொரு வழிகாட்டலும், வாய்ப்பும் இல்லாமல்போனதே என்று என்னை ஏங்க வைத்தது. தங்கள் நாளிதழின் ஒப்பற்ற பணி இளைஞர்களின் வாழ்வில் உயர்வை உண்டாக்குவது உறுதி.
கே.ராமநாதன், மதுரை.
சித்திரக் கதை சான்றுகள்!
வ
ளரும் பருவத்தில் படிக்கும் படக் கதைகளும், பாடங்களும் பசுமரத் தாணிபோல் குழந்தைகள் மனதில் பதியும் என்பதில் ஐயமில்லை. படங்களின் மூலம் கதை சொல்லி, படிப்பவரை ஈர்த்து மனதில் பதிய வைக்கும் உத்தி அந்நாட்களிலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது. சில வாரப் பத்திரிகைகளில் வெளியான ‘இன்ஸ்பெக்டர் ராஜவேல்’, ‘துப்பறியும் சாம்பு’, ‘குண்டு பூபதி’ போன்ற சித்திரக் கதைகள் இன்றளவும் நினைவில் நிற்பதும், ‘கன்னித் தீவு’ படக் கதையில் வரும் சிந்துபாத், லைலா பாத்திரங்கள் வயது வித்தியாசமின்றி இன்றும் நம்மை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுவதும் இதற்குச் சான்று.
கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.
மெட்ரோ கட்டணம் குறைக்கப்படுமா?
செ
ன்னை போக்குவரத்து விழிப்புணர்வு மையம் அமைப்பின் இயக்குநர் வி.ராமா ராவ் நேர்காணலில் பதிவுசெய்துள்ள கருத்துகளை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டணங்களை அமல்படுத்தும் நிர்வாகம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது ஏழை, நடுத்தரப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். டெல்லி, கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டங்களைவிட சென்னையில் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பது நியாயமல்ல. முதியவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவது மிகவும் அவசியம்.
விளதை சிவா, சென்னை.
அகிம்சை மறந்த அரசு
பெ
ரும்பான்மைதான் ஜனநாயகத்தின் வெற்றி என்றாகிவிட்டது தற்போதைய அரசியல் நடைமுறையில். ஐனநாயகம் என்பது பன்முகக் கருத்துகளைப் பரிமாறும் ஒரு சிந்தனைவெளி என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, வெற்றி என்கிற மாயாஜால விளக்கு நியாயங்களை மறைத்துக்கொண்டிருக்கிறது. ஏழையின் சொல்லும் கருத்தும் அம்பலத் தில் உலா வருவதற்கான மேடைகளே ஜனநாயகத்தின் முக்கிய ஆயுதம். மக்களாட்சி முறையில் வெற்றிபெற்றவர்கள் மக்களின் கருத்துகளை உதாசீனம் செய்வது, ஜனநாயகத்தன்மையையே கேலிக்கூத்தாக்கிவிடுகிறது. மக்கள் கூறும் பிரச்சினைகளைக் கேட்க, சந்திக்க மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகம் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் இல்லையா அல்லது மறுக்கிறார்களா? காந்தியின் அகிம்சை மீதும் சத்தியாகிரகப் போராட்டங்கள் மீதும் அரசுக்கே உடன்பாடு இல்லையா?
பெரணமல்லூர் சேகரன், மின்னஞ்சல் வழியாக..
மோதலுக்கு முடிவு
மே
29 அன்று வெளியான ‘இனியும் தேவையா ராஜ்பவன்கள்?’ கட்டுரை படித்தேன். ஆளுநர் பதவிகளால் கோடிக்கணக்கில் பண விரயம், மத்திய ஆளும் கட்சியின் முகவராகப் புறக்கடை வழியிலான மேலாதிக்கம், அதிகார துஷ்பிரயோகம் என கசப்பான அனுபவங்களைத் தான் இதுவரை கண்டுள்ளோம். சாமானியர்களின் வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் தீர்த்து வைக்கும் நிலையில், சட்டப் பேரவையில் பெரும்பான்மை குறித்த முடிவையும் பதவியேற்கச் செய்யும் அதிகாரத்தையும் உயர் நீதிமன்ற நீதி பதிக்கே வழங்கிட சட்டமியற்றல் சிறந்தது. மத்திய - மாநில அரசுகளின் மோதலுக்கு ஒருவகையில் முடிவுகட்டும் நடவடிக்கையாகவும் அது அமையும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago