இப்படிக்கு இவர்கள்: துயரத்துக்கு யார் பொறுப்பு?

By செய்திப்பிரிவு

அ.அப்பர்சுந்தரம்,

மயிலாடுதுறை.

துயரத்துக்கு யார் பொறுப்பு?

நி

யாயமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கும்போது, மத்திய - மாநில அரசுகள் அதை நிறைவேற்ற முன்வராது, என்ன கோரிக்கைகளுக்காகப் போராடுகிறார்கள் என்று அறிந்துகொள் ளும் மனப்பான்மைகூட இல்லாமல் செயல்பட்டுவருகின்றன. நீட் தேர்வுக் குளறுபடிகளை பெற்றோரும் ஊடகங்களும் முன்கூட்டியே வெளிப்படுத்தியும் சிபிஎஸ்இயுடன் கலந்து பேசி, மாணவர் களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய நடவடிக்கை எடுக்க வில்லை, மத்திய - மாநில அரசுகள். அதனால் ஏற்பட்ட சொல் லொணாத் துயரத்துக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்?

முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.

நல்லவற்றை எங்கிருந்தும் பெறலாம்

ருத்துவர் கு.கணேசனின் ‘காசநோய் இல்லாத இந்தியா எப்போது சாத்தியம்?’ என்ற கட்டுரையைப் படித்தேன். பல்வேறு காரணங்களால், ஆரம்ப சுகாதாரமும் அடிப்படை மருத்துவமும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடையவில்லை. நோய் கண்டவுடன் நோய்க்கான அடிப்படை மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற தனிநபர் விழிப்புணர்வு வேண்டும். காசநோயாளிகளுக்கு மருத்துவத்தோடு நாட்டுக்கோழி முட்டையுடன் (தினம் ஒரு முட்டை என்ற அடிப்படையில்) ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம், மகாராஷ்டிர மாநிலத்தின் செயல்திட்டத்தையாவது பிற மாநிலங்களும் கடைப்பிடிக்கலாம். நல்லவற்றை எங்கிருந்து பின்பற்றினாலும் தவறில்லை.

கே.ராமநாதன், மதுரை.

பிளாஸ்டிக் இல்லா உலகம் வேண்டும்

ந்தியாவில் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நகரங்களில் சென்னை இரண்டாம் இடம்வகிக்கிறது எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் அரசின் சிறப்புக் கவனத்துக்குரியது. விளைநிலங்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்கும் இந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளைக் குறைக்க அரசு எடுத்த மேம்போக்கான நடவடிக்கைகள் பயனற்றுப் போயின. விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் பெயரளவிலான தடை நடவடிக்கைகளும் இப்பிரச்சினைக்குப் போதிய தீர்வு தராது என்பதையே இது உணர்த்துகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருட்களுக்குக் கடும் வரி விதிப்பு, பிளாஸ்டிக் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துதல், கழிவுகளை முறையாக வகைப்படுத்தி கட்டுப்பாட்டுடன் மறுசுழற்சி செய்தல், பிளாஸ்டிக்குக்குப் பதில் மாற்றுப் பயன்பாட்டுப் பொருளை ஊக்குவித்தல் போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பலன் தரலாம்.

ச.சஞ்சய் ராம், 12-ம் வகுப்பு மாணவர், புதுக்கோட்டை.

வில்சன் அல்ல, ரூஸ்வெல்ட்!

மே

7-ல் வெளியான ‘பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் சந்திக்கப்போகிறதா அமெரிக்கா?’ என்கிற கட்டுரையில் அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவருக்குப் பின்னர் அதிபரானவர் உட்ரோ வில்சன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹூவருக்குப் பின் வந்தவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஆவார். உட்ரோ வில்சன் ஹெர்பர்ட் ஹூவருக்கு முன்பே அதிபராக இருந்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்