சே. செல்வராஜ், தஞ்சாவூர்.
காலத்தின் விமர்சனம்!
விவசாயம் தொடர்பாக ஏப்ரல் 11 அன்று சமஸ் எழுதிய கட்டுரை காலத்தின் விமர்சனம். தொட்டதெற்கெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை மேற்கோள் காட்டும் நடுத்தர வர்க்கம், அங்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், வரிச்சலுகைகள் குறித்து நிறைய அறிந்துகொள்ள வேண்டிய அவசியமுள்ளது. விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்காத நாடு இந்தியா. அதனால்தான் மன்மோகன்சிங் தனது ஆட்சிக் காலத்திலேயே, ‘விவசாயிகள் மாற்று வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார். கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தைக் குறைத்தோ, இல்லாமல் செய்தோதான் இந்த தேசத்தின் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்திட தொழிலதிபர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதையெல்லாம் அனுபவித்துவிட்டு தேசப்பற்றே இல்லாமல் பணத்தையும் சுருட்டிக்கொண்டு, தான் ஒரு வெளிநாட்டு குடிமகன் என அறிவித்து, இந்திய சட்டங்கள் தன்னை எதுவும் செய்ய முடியாது எனக் கொக்கரிக்கின்றனர். ஆனால், விவசாயிகளோ கடனை வாங்கி விவசாயம் பொய்த்துப்போனால் அவமானத்துக்கு அஞ்சி, தற்கொலையைத்தான் நாடுகின்றனர். விவசாயத்தைக் காக்க நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளில் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும். விவசாயம் நலிவடைந்தால் தேசம் மேலும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும்.
இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி.
தமிழுணர்வைப் பிரதிபலித்த போராட்டம்!
ஐபிஎல் நிகழ்வில் ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையைக் குறித்து உலகைப் பேச வைத்த போராட்டச் செய்திகளும், படங்களும் நெகிழ வைத்தன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டங்கள் அவசியம்தான். எனினும், வன்முறைச் செயல்கள் தேவையற்றவை. இந்தப் போக்கு, போராட்டத் தன்மையின் நோக்கத்தை நீர்த்துப் போகச்செய்து வலுவிழக்க வைக்கும்.
கி.செல்வராஜ், புலிவலம்.
தேவை விசாரணை
ஏ
ப்ரல் 4 அன்று வெளியான ‘சரஸ்வதி மகால் நூல்களைப் பதிவேற்றம் செய்வதில் சுணக்கம் என்?’ என்ற தலையங்கம் மூலம் நம் தமிழகத்தின் அரிய பொக்கிஷங்கள் மீது மக்களிடம் ஒரு விழிப்புணர்வு ஏற்படச்செய்துவிட்டது. காணாமல்போன நூல்கள் பற்றி விசாரணைசெய்ய நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் அதில் தொடர்ந்து நடந்துவரும் ஊழல்கள், பொக்கிஷ இடம் பெயர்வு வெளிச்சத்துக்கு வரும்.
பொன். குமார், சேலம்.
அடித்தளமாக இருக்கும்...
ப
க்தவத்சல பாரதி, ஆய்வு நூலாகத் தந்துள்ள பாணர் இன வரைவியல் - இந்தியாவில் நாடோடிகளின் அசைவியக்கங்கள்' நூல் குறித்து மதிப்புரை எழுதியுள்ளார் பிரபஞ்சன். பாணர்களை ‘மக்கள் கலைஞர்கள்' என்று போற்றியுள்ளார். மன்னர்களைப் பாடிப் புகழ்ந்ததுடன் நாடோடிகளாக இருந்து ஒரு நிலத்தின் மரபை மற்ற நிலத்தில் பரப்புவர்களாகவும் பாணர்கள் இருந்துள்ளனர் என்கிறார். பாணர்கள் படைப்புகள் குறித்து ஓர் ஆய்வும் தொடங்கப்பட வேண்டும் என்பது பிரபஞ்சனின் வேண்டுகோள். மேலும் இத்துறையில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு பக்தவத்சல பாரதியின் இத்தொகுப்பே அடித்தளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago