இப்படிக்கு இவர்கள்: தேசிய மூன்றாம் அணி உருவாக வேண்டும்!

By செய்திப்பிரிவு

இந்திரா பார்த்தசாரதி,

எழுத்தாளர்.

தேசிய மூன்றாம் அணி

உருவாக வேண்டும்!

விக்குமாரின் ‘நீதி நின்று கொல்லும்’ கட்டுரை சிறப்பாக இருக்கிறது. நீதி நின்று கொல்லும் என்பது உண்மை. ‘நின்று’ என்பதன் கால வரையறை தான் கவலையளிக்கிறது. பாஜகவுக்கு எதிராக ஒரு தேசிய மூன்றாம் அணி உருவாக வேண்டும். நம் நாட்டுக்கு எதிர்காலம் இருக்கிறதென்றால், ஓர் அகில இந்திய தலித் அணி திரள் வதில்தான் இருக்கிறது. இந்த அணி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் உட்கொண்டதாக இருத்தல் சிறப்பு. இப்போது, நீதிமன்றங்கள், கல்வி, கலாச்சார மையங்கள், சர்வதேச நிறுவனங்களாகிய ஐஎம்எஃப், உலக வங்கி அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக மோடியின் ஆட்சிக்குப் பின்பலமாக இருக்கின்றன. சமூக வலைதளங்களை பாஜக பயன் படுத்தும் அளவில் 20 சதவீதம்கூட எதிர்க்கட்சிகள் பயன்படுத்து வதில்லை. வேதனையாக இருக்கிறது.

கே.ராமநாதன், மதுரை.

மகத்தான பணி!

தி

ருமண வயதுக்கு முன்பே கட்டாயத் திருமணம் செய்யப்படவிருந்த விருத்தாசலம் சிறுமியை ‘உங்கள் குர’லில் எதிரொலித்த தகவலின் அடிப்படையில், காப்பாற்ற எடுத்த நடவடிக்கை மகத்தானது. கட்டாயத் திருமணத்தால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படவிருந்த சிறுமியைக் காப்பாற்றக் காரணமான ‘தி இந்து’ வாசகரும், உடனே நடவடிக்கை எடுத்த சமூக நலத் துறை அலுவலரும் பாராட்டுக்குரியவர்கள்!

ஆறுமுகம் சேதுராமன், தென்மாப்பட்டு.

விவசாய நிலங்களை அழிப்பது வளர்ச்சியல்ல!

‘கா

விரி டெல்டா வளத்தைக் காவுகேட்கிறதா பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம்?’என்கிற கட்டுரையைப் படிக்கும்போதே பதறுகிறது. தமிழகத்துக்கு மட்டுமல்ல, கேரளத்துக்கும் இங்குள்ள விவசாய நிலங்களிலிருந்து நெல் செல்கிறது. வளமையான பூமி அழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

திறமையானவர்களை வெளிக்கொணரும் சிறப்புப் பக்கம்!

ப்ரல் 25-ல் சிறப்புப் பக்கம் படித்தேன். தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுவரும் துறையூரைச் சேர்ந்த க.முருகேசனின் முற்போக்கான சிந்தனையும், எழுத்துப் பணியும் வியக்க வைக்கிறது. சாக்பீஸ் மூலம் சிற்பங்களை உருவாக்கி, கற்பனைத் திறத்தை வெளிப்படுத்தும் கல்லூரி மாணவன் ஹரிஹர நாராயணன் போன்றவர்களின் கற்பனையையும், கலை ஆர்வத்தையும் ஊக்குவிக்க வேண்டும். விவசாயி வீரமணியின் தன்னலமற்ற சேவையில், நஞ்சில்லா உணவு உற்பத்தியின் அவசியத்தை உணர முடிகிறது.

எஸ்.தணிகாசலம், கோபிசெட்டிபாளையம்.

சரியான தருணம் இது

நீ

தித் துறை சந்தித்துவரும் நெருக்கடிகள் பற்றி எழுதியுள்ள, ‘புனிதர்கள் பொசுங்கட்டும்’ என்கிற கட்டுரை, சரியான நேரத்தில் ஒலித்துள்ள, முக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கை மணி. நீதித் துறையின் மீது நம்பகத்தன்மை குறைந்துவருகிறது என்பது எவ்வளவு கவலைக்குரிய விஷயம். தலைமை நீதிபதியின் மீது மற்ற நீதிபதிகள் நடவடிக்கை கோருவது அசாதாரணமான சூழ்நிலை அல்லவா? நீதித் துறையின் மாண்புகள் காக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டிய சரியான தருணம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்