ஆர்.முருகேசன், அந்தியூர்.
‘ஜனநாயகம்’ வெற்று வார்த்தையல்ல!
ஏ
ப்ரல் 24 அன்று சமஸ் எழுதிய ‘புனிதங்கள் பொசுங்கட்டும்!’ கட்டுரை வாசித்தேன். அக்கட்டுரையின் கருத்துகள் ஒவ்வொன்றும் நம் நாட்டின் மக்கள் மனதில் உள்ள மனக்குமுறல்கள்தான். ஜனநாயக நாட்டில் மக்களின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். அதிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கையாகப் பார்க்கப்படுவது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரும் அளவு நாட்டில் நீதித் துறையின் நிலைமை மோசமாகிவிட்டதை அறியும்போது மிகவும் கவலையாக உள்ளது. கட்டுரையின் தலைப்பிலும் கட்டுரையின் உள்ளும் குறிப்பிடப்பட்டுள்ள ‘புனிதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நீதித் துறை என்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் பார்க்கப்பட்டதன் விளைவுதான் இந்த நிலைக்கு முக்கியக் காரணம். அரசியல் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே நீதிமன்றங்கள் எதிரொலிக்கும் என்ற நிலை மெல்ல மெல்ல ஏற்பட்டுவிட்டால் ‘ஜனநாயகம்' என்பது வெற்று வார்த்தையாக மாறிவிடும். எனவே, ‘எந்த ஒரு ஜனநாயக அமைப்பின் உயிரும் மக்களுக்கு அதன் மீதிருக்கும் நம்பிக்கையில்தான் இருக்கிறது. அதுவும் ஒரு சாமானியனின் நம்பிக்கையைக் காட்டிலும் நீதித் துறை இழக்கப்போகும் சொத்து எதுவுமில்லை' என்று கட்டுரையில் தீர்க்கமாகக் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் உயிர் பெற வேண்டும்!
கே.ராமநாதன், மதுரை.
கடமையாக மாறிய வைபவம்
ஊ
ர்க்காரர்கள், உறவுக்காரர்களின் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு, மன மகிழ்ச்சியுடன் வீடுகளில் நடைபெற்ற திருமண வைபவங்கள், காலப்போக்கில் சத்திரங்களில் நடத்தப்பட்டு, பின்பு அதுவும் மாறி இன்று நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தி செல்வாக்கைக் காட்டும் நிகழ்ச்சியாக மாறிவிட்ட யதார்த்த நிலையை ‘காற்றில் கரையாத நினைவுகள்’ கட்டுரையில் உணர்வு பொங்கக் கூறியுள்ளார் வெ.இறையன்பு. இன்றைய திருமணங்களில் காணப்படுவது ஒரு மங்கள நிகழ்வில் உள்மனதில் மகிழ்ச்சியுடன் அல்லாது கடமைக்காகப் பங்குகொள்ளும் நிலையின் வெளிப்பாடுகளாக மாறியிருப்பது பெருஞ்சோகம்.
கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலை.
வங்கிகளில் நவீன பாதுகாப்பு வேண்டும்
செ
ன்னையில் ஜன நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் கொள்ளையடிக்கத் துணிந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. துப்பாக்கிகளுடன் தப்ப முயன்ற நபரைப் போக்குவரத்துக் காவலர்களும் பொதுமக்கள் சிலரும் மடக்கிப் பிடித்த செயல் பாராட்டுதற்குரியது. மெடல் டிடக்டர் நுழைவு வாயில்களை அமைப்பது உள்ளிட்ட நவீன பாதுகாப்பு வசதிகள் காலத்தின் அவசியம் என்பதை வங்கிகள் உணர வேண்டும். ஆயுதம் தாங்கிய இளம் காவலர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.
டாக்டர் எஸ்.எஸ்.ரவிக்குமார், கிருஷ்ணகிரி.
காலனி ஆதிக்கத்தின் நீட்சி
இ
ந்திய ஜனநாயகத்தில் உச்சக்கட்ட புனிதத்தன்மையை முழுமையாக ஆண்டு, அனுபவித்து வருவது நீதித் துறை மட்டுமே. அன்றாடம் நீதிமன்றத்தில் பயன்பாட்டில் உள்ள சொல்லாடல்களான ‘மை லார்ட், ஐ ப்ரே, ஐ பெக்’ போன்றவை எல்லாம் காலனி ஆதிக்கத்தின் நீட்சியன்றி வேறொன்றுமில்லை. சமஸ் குறிப்பிட்ட மாதிரி புனிதங்கள் பொசுக்கப்பட்டால்தான் கேள்வி கேட்கும் உரிமை கிடைக்கும். அப்போதுதான் நம் நாடு குடிமக்கள் வாழத் தகுதியான இடமாக மாறும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago