இப்படிக்கு இவர்கள்: மாற்று வழிகளையும் சிந்தித்திடுக

By செய்திப்பிரிவு

மாற்று வழிகளையும் சிந்தித்திடுக

கா

விரி பிரச்சினை தொடர்பாக, ஒருபுறம் உரிமைக்குப் போராடுகையில், மறுபுறம் மாற்று வழிகள் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதும் அவசியம். காவிரியின் நீரோடு பல ஆறுகளின் நீரும் கலக்கின்றன. கர்நாடகத்தில் காவிரியுடன் கலக்கும் ஒவ்வொரு உபநதியிலும் அணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் காவிரியின் நீரளவை வெகுவாகக் குறைத்துவிட்டனர். தமிழ்நாட்டிலும் பவானி, அமராவதி மட்டுமின்றி நொய்யலாற்று நீரும் காவிரியோடு கலந்தன. மேட்டூர் தொடங்கி கரூர் வரை பல தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் காவிரியில் கலந்து நஞ்சாக்குகின்றன. இம்மூன்று ஆறுகளைத் தூய்மைப்படுத்துவது நற்பயனை விளைவிக்கும். நீர் விற்பன்னர்களின் துணையோடு நம் நீராதாரங்களை மேம்படுத்துவது பற்றிச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

காங்கிரஸ் செய்ய வேண்டியவை..

ப்ரல் 3 அன்று வெளியான ‘மாற்று சித்தாந்தங்களை முன்வைக்கத் தவறும் காங்கிரஸ்!’ கட்டுரையைப் படித்தேன். எதிர்க்கட்சிகள் பலமாக இல்லாததே இப்போதைய ஆட்சியாளர்களின் பலம் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும். விளிம்புநிலை மக்களுக்குக் கட்சியின் அதிகார அமைப்பில் இடமளிப்பதில் ராகுல் உறுதியாக இருக்க வேண்டும். நெருக்கடியான நிலையில் கடுமையான போராட்ட குணம் ராகுலுக்குத் தற்போது தேவை. காங்கிரஸைப் புதுப்பித்தல் என்பதை மனதில்கொள்ளும் அதேநேரத்தில் முந்தைய தலைவர்களின் ஆளுமை பற்றியும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

- கோ.கிருஷ்ணமூர்த்தி, கடலூர்.

விழிப்புணர்வுக் கட்டுரை

ப்ரல் 2 அன்று வெளியான 'முற்றிலும் குணமாகக்கூடியதா ஆட்டிசம்' கட்டுரையைப் படித்து நெகிழ்ந்தேன். மாற்றுத் திறனுடைய குழந்தைகள், பெற்றோர்களை விளம்பரத்தின் வாயிலாக ஏமாற்றுபவர்களைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களைக் கொண்ட கட்டுரை அது. மூளைச் செயல்பாட்டுக் குறைவால், நரம்பியல் சார்ந்த வளர்ச்சிக் குறைபாடுகள் ஏற்பட்டு அதனால் இயல்பான மனிதர்களாகச் சிந்திக்க இயலாத ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்த உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலை நன்கு விளக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களின் விவரிக்க இயலாத மன உளைச்சலுக்கு மனிதநேய மருந்திடுதல் மிகவும் அவசியம்.

- கு.மா.பா.கபிலன், மின்னஞ்சல் வழியாக…

பொலிவுறு நகரக் குழுவில் பிரதிநிதித்துவம் தேவை

பு

துச்சேரி பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்துக்கு ஆலோசகர் நியமிக்க குளோபல் டென்டர் அறிவிக்கப்பட்டுள்ள தகவல் ஏப்ரல் 2 அன்றைய நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் ஆலோசகராக, மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் உள்ள பட்டியலில் உள்ளவரை மட்டுமே நியமிக்க முடியும் என்றும் அந்த ஆலோசகரே 53 திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்க முடியும் என்றும் தெரிகிறது. இந்த நகர அமைப்புக்கு மத்திய அரசு, மாநில அரசு, பிரெஞ்சு அரசாங்கம், வெளி மார்க்கெட் நிதி கொடுத்துள்ளன. திட்டமிடலில் அனைவரின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும். முதன்மையாகப் புதுச்சேரியின் பூர்வகுடியினர் அதில் இடம்பெற வேண்டும். ஒரே நபரிடம் 53 திட்டங்களைக் கொடுப்பது சர்வாதிகாரத்தன்மையை ஏற்படுத்திவிடும். புதுச்சேரிப் பொலிவுறு நகர இலச்சினையில் திருத்தம்செய்ய வேண்டும் என்று மக்கள் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடர்புடையவர்களின் ஆலோசனைகளும் இடம்பெற வேண்டுமெனில், அமைக்கப்படும் குழுக்களில் அவர்களும் இடம்பெற வேண்டும்.

- தூ.சடகோபன், தலைவர்-புதுச்சேரித் தன்னுரிமைக் கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்