வெளிச்சத்துக்கு வராத வன்கொடுமைகள்
ஏ
ப்ரல் 8-ல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்துள்ள தலையங்கம் சரியான கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. தலித்துகள் மீதான வன்முறை குறித்த புகார்கள், விசாரணை என்கிற அளவிலேயே பெருமளவில் முடித்துவைக்கப்படுகின்றன. அதையும் மீறி நீதிமன்றம் சென்றால் போதிய ஆதாரமில்லை எனக் கூறி தள்ளுபடிசெய்யப்படுகின்றன. 2010-ல் 38% வன்கொடுமைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 2016-ல் 16% ஆகக் குறைந்துள்ளது. அதிலும்கூட தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் வெறும் 1.4%. இந்த இடத்தில்தான் நீதித் துறையில் உள்ள அரசியல் தலையீடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரருடைய கூற்றை இணைத்துப்பார்க்க வேண்டும். குதிரை வைத்திருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு தலித் இளைஞர் கொல்லப்படுகிறார். பசுவின் பெயரால் உனாவில் தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாகினர். கிராமங்களில் நடைபெறும் வெளிச்சத்துக்கு வராத வன்கொடுமைகள் ஏராளம். தைரியமாகப் புகார் சொல்பவர்கள் மிகமிகக் குறைவே. அதிக அழுத்தத்துக்கு ஆளாகிவரும் தலித்துகளின் அனைத்துப் பாதைகளையும் அடைத்துவைக்கும்போது வன்கொடுமைக்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை. போராட்டம் கொடுத்துள்ள வீச்சின் காரணமாகவே வேறு வழியின்றி நீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது. நீதிமன்றமும் மறுபரிசீலனை மனுவை அனுமதித்துள்ளது. தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டுமே தவிர இங்கொன்றும் அங்கொன்றுமே நிகழ்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டி அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது.
- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
நடிகர்கள் பேச மாட்டார்களா?
ஏ
ப்ரல் 9-ல் வெளியான கருத்துச்சித்திரம் (நம்ம வாதம், அடிக்கிற மாதிரியும் இருக்கணும்...) சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. காவிரி பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே காட்டுகின்றன. திரைப்பட நடிகர்களும்கூட சென்னையில் மவுன விரதம்தான் இருந்தார்கள். தமிழ் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் அவர்கள் பேசியிருந்திருக்கலாம். அவர்களும்கூட மத்திய அரசைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களோ என்னவோ?
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்
ஸ்டெர்லைட்டுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பு?
ஏ
ப்ரல் 8-ல் வெளியான வைகோவின் பேட்டியைப் படித்தேன். அவர், 90-களின் மத்தியிலிருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிவருவதை தூத்துக்குடியில் உள்ள அனைவரும் அறிவோம். இன்னமும் அவரது சீராய்வு மனு நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக இப்போதுதான் மக்கள் முழுவீச்சுடன் போராடிவருகிறார்கள். இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திலேயே வைகோவுக்கு ஆதரவு கொடுத்திருந்தால், கடந்த 20 ஆண்டுகளில் தூத்துக்குடி பாழ்பட்டிருக்காது. தூத்துக்குடியில் அனல் மின்நிலையங்கள், ஸ்பிக் போன்ற உர நிறுவனங்கள் இருக்கும்போது ஏன் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டும் மக்கள் போராடிவருகிறார்கள் என்றால், அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் காரணம். இதை அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் சிந்திக்க வேண்டும்.
- மு.சுப்பையா, தூத்துக்குடி.
நல்ல மிராசுகளும் இருந்தார்கள்!
ஏ
ப்ரல் 8-ல் ‘கலை ஞாயிறு’ பகுதியில் வெளியாகிய ‘ஒரு கடைசி மிராசின் கதை’ எனும் தலைப்பில் தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய புத்தக விமர்சனம் படித்தேன். தஞ்சை மண்ணுக்கே உரித்தான சுவையோடு எழுதப்பட்டுள்ளது. மிராசு, வயல்வெளி, பண்ணைகள், ஆறு, வாய்க்கால், கண்மாய் எல்லாம் இன்று மறைந்துவிட்டன. மிராசுதார்களில் பல நல்ல மனிதர்களும் இருந்தனர். பல அரசு பள்ளிகள் அவர்களின் முயற்சியால் உருவாயின. அக்கால மிராசுகளுக்கு கல்வியவு குறைவுதான். ஆனால் அவர்களிடம் மனிதநேயம் இருந்தது. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டார், கவிராயர்.
- ஜீவன். பி.கே., கும்பகோணம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago