வெ.ரா.ஆனந்த், வரலாற்று ஆய்வாளர் (இதழியல்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
ஆய்வாளர்களின் நிலை!
ஏ
ப்ரல் 17-ல் வெளியான ‘கல்வித் துறை அவலங்களைப் பேச வேண்டிய தருணம் இது’ கட்டுரை படித்தேன். பேராசிரியை நிர்மலா தேவியின் செயல்பாடு விஷம் கலந்த சோற்றுப் பானையின் ஒரு பருக்கைதான். இந்தியப் பல்கலைக்கழகங்கள் குறிப்பாகத் தென்னகப் பல்கலைக்கழகங்கள் ஆய்வுத் துறையில் மிக மோசமான நிலையில்தான் உள்ளன. ஓர் ஆய்வு மாணவர், தன் ஆய்வு வழிகாட்டியைத் தேர்வுசெய்யும் நிலையிலும், வழிகாட்டிப் பேராசிரியர் ஆய்வு மாணவரைத் தீர்மானிப்பதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஆய்வு என்பது இன்றைய காலகட்டத்தில், பேராசிரியர் வேலைக்குத் தேவைப்படும் ஒரு தகுதிதான் என்ற நிலைதான் இவ்வளவு ஊழலுக்கும் அடிப்படை. உண்மையில் சொற்பமான ஆய்வாளர்கள்தான் ஆக்கபூர்வமான ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். பெரும்பாலான ஆய்வாளர்கள் பேராசிரியர் வேலைக்காக மட்டுமே செய்கின்றனர். இந்த அவலத்தின் வெளிப்பாடுதான் 1% ஆய்வுகள் மட்டுமே உலக அளவில் பேசப்படுகின்றன. பணம் உள்ள பணக்கார ஆய்வாளர்கள் அயல் நாடுகளுக்குப் பறந்துவிடுகின்றனர். அறிவும் ஆற்றலும் மட்டுமே உள்ள இந்தியர்கள் நிலைதான் மிக மிக அழிவு நிலையில் காணப்படுகிறது. இது தொடர்ந்தால் இந்தியக் கல்வி, குறிப்பாகத் தமிழகக் கல்வியை மீட்டெடுக்கவே முடியாத நிலை ஏற்படும்.
- ரா. ரேவதி, ஈரோடு.
எப்பொழுது முற்றுப்புள்ளி?
மா
ணவிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள் சில பேராசிரியர்கள். மாணவர்களை சம்பளம் இல்லாத வேலையாட்களைப் போல கேவலமாகவும் சிலர் நடத்துகிறார்கள். இந்தச் சூழல்கள் கடந்த 20 இருபது ஆண்டுகளாகவே நடைபெற்றுவருகிறது. இவற்றுக்கு எப்பொழுது முற்றுப்புள்ளி வைப்பது?
தாராபுரம் தெ.லோகநாதன், தலைமையாசிரியர் (பணிநிறைவு).
தமிழாசானுக்குப் பாராட்டுகள்
1330
குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவிகளின் அரசுப்பள்ளி அமைந்த கிராமத்தின் பெயரோ கடைக்கோடி. கடைக்கோடியாக இருந்தாலும் அவர்கள் கலங்கரைவிளக்கங்கள். சாதனைக்குத் துணைபுரியும் தமிழாசானுக்குப் பாராட்டுக்கள்!
சிவ.ராஜ்குமார்.சிதம்பரம்,
பாரபட்சம் கூடாது!
நி
தி ஆதாரங்களை மாநிலங்களுக்குப் பிரித்தளிப்பதில் 15-வது நிதிக்குழு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடுசெய்தும், பாஜக தன் சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தியும் ஒதுக்கீடு செய்வதாக பினராய் விஜயன் கூறுவது உண்மையே எனும் குரல் கர்நாடகம், மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது. மத்திய அரசு, மாநிலங்களின் பாதுகாவலரா, அல்லது போட்டியாளரா என்ற விவாதம் நாட்டில் தொடங்கிவிட்டால் நாடு, மாநிலங்கள்வாரியாக பிளவுபட்டு நிற்குமே.
ஒரு குறிப்பு
‘கலைச்சொல் அறிவோம்’ தொடரில் ‘சிட்டிஸன்’ என்ற சொல்லுக்கு ‘குடிநபர்’ என்ற சொல்லைப் பரிசீலிக்கலாம் என்றே பேராசிரியர் ராஜன்குறை குறிப்பிட்டிருந்தார். ‘குடிமகர்’ என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்பது ஆசிரியர் குழுவினரின் பரிந்துரை. ‘தி இந்து’வில் நாம் அந்தச் சொல்லைப் பயன்படுத்திவருகிறோம். பேராசிரியர் ‘குடிமகர்’ என்ற சொல்லில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவிக்கிறார்.- ஆசிரியர்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago