நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்
கா
விரி தொடர்ப் போராட்டங்களின் விளைவாக நீரின் முக்கியத்துவத்தையும், விவசாயத்துக்கு அவசியமான அம்சங்கள் பற்றியும் உணர்ந்திருக்கிறோம். நீரின் தேவையை உணர்ந்து போராடுகிறோம் சரி. ஆனால், நாம் நீரை மதிக்கிறோமா? பொறுப்புடன் பயன்படுத்துகிறோமா? அன்றாடத் தேவைகள் அனைத்திலும் பயன்படுத்தும் நீரை, தேவையான அளவில்தான் பயன்படுத்துகிறோமா? உயிர்களின் ஆதார மூலத்தைச் செலவழிக்கிறோம் எனும் உணர்வுடன் நீரை அணுக வேண்டும். நம் குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கக் காட்டும் முனைப்பை நீர் சேமிப்பிலும் காட்ட வேண்டும். இந்த பூமியின் ஒப்பற்ற சொத்து, நீர். வீணாக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் மீண்டும் பயன்படுத்தத்தக்கதாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைச் சிந்தித்தாலே அதன் மகத்துவம் புரியும்.
- ரங்கன். அய்யாசாமி, பல்லடம்.
மத்திய அரசின் மெளனம்
ஏ
ப்ரல் 6 அன்று கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘குரல் டெல்லியை உலுக்காமல் தண்ணீர் தமிழகம் வராதா?’ கட்டுரையில் மற்ற மாநிலங்களின் பிரச்சினை, வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட நதிநீர் மேலாண்மை வாரியங்கள், சட்ட விவரங்கள் போன்றவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்தகைய முன்னுதாரணங்கள் இருந்தும் மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அரசியல் கணக்குகளைத் தாண்டி மக்கள் நலனை முக்கியமாகக் கருதுவதுதானே ஒரு நல்ல அரசுக்கு அழகு!
- ராஜகுமார், மின்னஞ்சல் வழியாக…
ஆச்சரியம் தந்த டைரி
ஏ
ப்ரல் 7 அன்று வெளியான ‘காட்டிக்கொடுத்த டைரி' கட்டுரை படித்தேன். ஆசிரியர் ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதிய நாட்குறிப்பு அவருக்குப் பாதகமாக இருந்தாலும், அதே நாட்குறிப்பு அவர் சிறையிலிருந்து விடுதலையாக முக்கியக் காரணமாகவும் அமைந்தது என்ற செய்தி ஆச்சரியம் தந்தது. காவல் துறையின் பழிவாங்கலுக்குப் பின்னும் 92 ஆண்டுகள் உயிர் வாழ்வது இயற்கையின் மகத்துவம்தான். விதி வலியது என்பதை ஜேக்கப்பின் நாட்குறிப்பும், உடல்நலத்துக்குக் கடும் பயிற்சி தேவை என்பதை அவரது ஆயுளும் தெரிவிக்கின்றன.
- ஜீவன். பி.கே. கும்பகோணம்.
மக்கள் நலன் முக்கியம்
‘கா
மன்வெல்த்’ அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றால் நமக்குப் பெருமைதான். அதேவேளையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும்போது தொழில் நிறுவனங்களைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.உற்பத்தி சாதனங்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அரசுடைமையாக்க வேண்டும். உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்குமான இடைவெளி குறைய உற்பத்தித் துறைகளைப் பொதுத் துறைகளாக மாற்ற வேண்டும். இத்தகைய தலைமைப் பண்புள்ள அரசே சர்வதேச அமைப்புகளுக்குத் தலைமையேற்கத் தகுதி படைத்தது.
- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.
துணைவேந்தர் தேர்வுமுறை
ஒ
ருகாலத்தில் அழைப்பின் பேரில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். சில பேராசிரியர்களும் அழைப்பின் பேரில் பணியாற்றியுள்ளனர். விண்ணப்பித்து பலகட்ட நேர்காணலுக்குத் தம்மை உட்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்று துணைவேந்தர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியது. தேர்ந்தெடுக்கும் ஆளுநருக்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை. இணைவேந்தரான உயர்கல்வி அமைச்சர்கூட இத்தேர்வு முறையில் இடம்பெறவில்லை. இம்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல துணைவேந்தர்களும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர். தமிழரல்ல என்று குறைகாண்போர் நர்சரி வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை ஒழித்திடப் போராடுவார்களா?
-ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago