மகாத்மா வாழ்ந்த மண்ணிலா நாம் வாழ்கிறோம்?
பி
ப்ரவரி 14 அன்று வெளியான ‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகராக மூன்று தேர்தல் ஆணையர்களுக்கும் இரண்டு மடங்கு சம்பள உயர்வு’ என்ற செய்தியை வாசித்தேன். ‘தேச மக்கள் உடை இல்லாமல் இருக்க, எனக்கு மட்டும் கோட்டும் சூட்டும் தேவையா?’ என்று கூறி, தன் மேல்சட்டையைக்கூடத் துறந்த மகாத்மா காந்தி வாழ்ந்த தேசத்தில்தான் நாம் வாழ்கிறோமா? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு மாதம் ரூ. 2.5 லட்சம் சம்பளம். இது 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்பதால், இதன்மூலம் முன்னாள் தேர்தல் ஆணையர்களும் பயன்பெறுவார்கள். இதேபோல் அரசு உயர் அதிகாரிகளும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும் வரைமுறையற்ற சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெற்று, சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். தமிழகத்தில்கூட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு மக்கள் வழங்கிய சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தாங்களே சம்பளத்தை 100% உயர்த்திக்கொண்டனர். நம் நாட்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியமாக 18 ஆயிரம் தங்களுக்கு வேண்டும் என்று போராடி வருகின்றனர். அதாவது, தினசரி ரூ. 600 கூலி வேண்டும் எனக் கேட்கிறார்கள். சத்தான உணவு, நல்ல உடை, குடியிருக்க வீடு, தொடர்ச்சியான வேலை, பட்டினியற்ற வாழ்க்கை நடத்தும் அளவுக்குக் கூலி என்பது, இந்திய மக்களின் கனவாகவே உள்ளது. பிஹெச்.டி பட்டம்பெற்ற, வேலையற்ற இளைஞர்கள் உட்பட 17 லட்சத்து 80 ஆயிரம் பேர், இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட 9,351 காலிப் பணியிடங்களுக்கு, தேர்வாணையத் தேர்வு எழுதினார்கள் என்ற செய்தி, நாட்டில் வேலை யற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துகொண்டே செல்வதை அல்லவா காட்டுகிறது! விவசாயிகள், தொழிலாளர்களின் வறுமையுடன் கூடிய வேதனையான வாழ்க்கை தொடர்கதையாக உள்ளது. மறுபக்கம் அரசு அதிகார பீடத்தில் உள்ளவர்கள் மட்டும் மேலும் மேலும் வசதிகளைப் பெறுகிறார்கள்.
- ஆர்.முருகேசன், அந்தியூர்.
கண்டுபிடிப்புகளுக்கு
ஊக்கமளிப்போம்!
பி
ப்ரவரி 5 அன்று வெளியான ‘பெரிய கண்டு பிடிப்புகளுக்குச் சிறிய ஆரம்பங்களே காரணம்’ என்கிற கட்டுரை வாசித்தேன். ஆராய்ச்சி செய்பவர்களின் ஆய்வுத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதல்ல என்ற கருத்து சரியே. அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டிலிருந்து ஆராய்ச்சிகள் பன்மடங்கு பெருக வேண்டும். சிறிய சிறிய கண்டுபிடிப்புகளுக்குப் பின் உள்ள பெரிய தத்துவங்கள், உண்மைகள் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் இருக்கும் என்பதால், அனைத்துவிதமான கண்டு பிடிப்புகளுக்கும் ஊக்கமளிக்க வேண்டும்.
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
நம் காலத்துக்கான கேள்வி
ம
க்களாட்சி குறித்து தொடர் விவாதங்களைத் தூண்டக்கூடிய அருமையான ஒரு பதிவு ‘ஜெயலலிதா புன்னகைக்கிறார்..’ கட்டுரை. நமது இருப்பும் சிந்திப்பும் எவ்வாறு பொய்மைகளால் பின்னப்பட்டுக் கிடக்கின்றன என்பதை, அரசியல் களத்தை முன்வைத்துப் புரிந்துகொள்ள உதவும் நுட்பமான கட்டுரை. ஓரிடத்தில் உலகில் தரகுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக அரசியல் கட்சி என்ற ஒன்று இருக்கிறதா எனக் கேட்கிறார் கட்டுரையாளர். அரசியலில் மட்டுமல்ல, அனைத்துத் தளத்திலும் இந்தத் தரகு நீக்கமற நிறைந்திருகிறது. விவசாய உற்பத்தியாளர்களைவிட, அவற்றைச் சந்தைக்கு எடுத்துச் செல்பவர்களே செழிப்பதுபோல, இந்தத் தரகர்களே இன்றைக்கு அனைத்தையும் ஆட்டிப் படைப்பவர்களாக உருவெடுத்துள்ளார்கள். தரகு முறையை அழிப்பது எவ்வாறு? - இதுதான் நமது காலத்துக்கான கேள்வி. இவ்வளவுதான் புதிய இந்தியா என்ற சித்தரிப்பும், அதில் வெளிப்படும் கிண்டலும் இரும்பு முகமூடியை உருக்கும் வார்த்தைக் கோலங்கள்!
- பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago