இப்படிக்கு இவர்கள்: அறிவார்ந்த தலைமுறைகளை உருவாக்கும் புத்தகத் திருவிழாக்கள்!

By செய்திப்பிரிவு

அறிவார்ந்த தலைமுறைகளை உருவாக்கும் புத்தகத் திருவிழாக்கள்!

தி

ருப்பூரில் கடந்த 25-ம் தேதி 145 அரங்குகளுடன் துவங்கிய புத்தகத் திருவிழா குறித்து, அதன் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் செய்தியாக ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளும், தொழிலாளர்களும், ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அறிவியல் இயக்கமும் இணைந்து இதனை முன்னெடுத்துச் செல்வது பாராட்டுக்குரியது. மேலும், இந்த ஆண்டு புதிய முயற்சியாக அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 5,000 மதிப்பில் புத்தகங்கள் வழங்க உள்ளன. புத்தகங்கள் வாங்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மலிவு விலையில் உண்டியல்கள் வழங்கப்படுகின்றன. மேலும், காலை நேர அறிவியல் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வையிட இலவசமாகப் பேருந்து வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, மாவட்டம் முழுவதும் மாணவர் திறனாய்வுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி, மாணவர்களின் பன்முகத்திறமையை வெளிப்படுத்தும் வகையில், திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. ‘நம் கிழிந்த எண்ணங்களைத் தைப்பது நல்ல நூல்களே’ எனும் இறையன்புவின் வார்த்தைக்கேற்ப புத்தகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடப்பது அறிவார்ந்த தலைமுறைகளை உருவாக்கும்!

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

பிரபஞ்சனின் அழகான பதிவு

ந்த வாரம் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ கட்டுரையில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் நூலிலிருந்து, சில வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வுகளை பிரபஞ்சன் மிகவும் அழகாகப் பதிவிட்டுள்ளார். மதச்சார்பற்ற இயக்கம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியில், சிறுபான்மைத் தலைவர்கள் எப்படி ஓரம்கட்டப்பட்டார்கள் என்று அருமையாகப் பதிவிட்டிருந்தார். ஒரே இறைவனை வணங்கும் முஸ்லிம் சமூகத்தில் ஏன் இத்தனைப் பிரிவுகள் என்ற ஆசாத்தின் ஏக்கமும், நாட்டின் சுதந்திரம் ஒன்றும் சும்மா வந்துவிடவில்லை. மகத்தான மனிதர்கள் செய்த மகத்தான தியாகங்களால் பெற்றது. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கும் தகுதியையாவது இந்தத் தலைமுறை பெற வேண்டும் என்ற வாக்கியங்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

- அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

ஆவன செய்தால் நல்லது

பு

திய சிந்தனையை வளர்க்கும் ‘தி இந்து’ நாளிதழ், நாடாளுமன்ற, சட்ட மன்ற அவை கூடும் நாட்களில், அவற்றின் செய்திக்கென ஒரு பக்கம் முதல் இரண்டபக்கம் வரை ஒதுக்கி, அவையில் தனிநபர் மசோதா, அரசின் வரைவு மசோதா போன்ற மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவது குறித்தும், அந்த மசோதாவால் மக்களுக்கான நன்மைகள் என்ன.. தீமைகள் என்ன என்பதை விளக்கும் கட்டுரைகள், வல்லுநர்களின் கருத்துகள் போன்ற பயனுள்ள தகவல்களை வழங்க ஆவன செய்தால் பயனுள்ள வகையில் அமையும்!

- க.துள்ளுக் குட்டி, நூர்சாகிபுரம்.

உற்பத்தியைத்

தடை செய்ய வேண்டும்

சு

ற்றுச்சூழல் பராமரிப்புக் குறியீட்டில், 180 நாடுகளில் 177-வது இடத்தில் இந்தியா உள்ளதாக உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் கெடுவதற்கு முதல் காரணம் பிளாஸ்டிக் பைகள்தான். கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே சேருவதால் அடைப்பு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகிப் பல நோய்கள் பரவுகின்றன. பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்வதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் பை உற்பத்தியை அறவே தடை செய்ய வேண்டும். மாற்றாக, பழைய கால துணிப் பைகளைப் பயன்பாட்டுக் கொண்டுவர வேண்டும்.

- வ.சக்கரபாணி, அல்லப்பனூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்