இப்படிக்கு இவர்கள்: துணைவேந்தர் கைது வெட்கக்கேடு

By செய்திப்பிரிவு

துணைவேந்தர் கைது வெட்கக்கேடு

பே

ராசிரியர் நியமனத்துக்குக் கையூட்டு பெற்றதாக துணைவேந்தர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளது வெட்கக்கேடு. ஒரு காலத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் அழைப்பின் பேரில், பேராசிரியராகப் பணியாற்றினர். ஒரு மாவட்டத்தில் சத்துணவு உதவியாளர் பணி கிடைக்க ரூ.3 லட்சம் பெறப்பட்டதும் தெரியவருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் கல்லூரித் துறை அதிகாரி, பேராசிரியர் பணியிடங்களை ஏலம் விட்ட கதையும் நிகழ்ந்துள்ளது. இந்தப் பணியிடங்கள் அனைவரது, குறிப்பாக எளியவரது உரிமை. மக்கள் விழிப்படைந்து ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும். ஊழலற்ற அரசே மக்களுக்குப் பாதுகாப்பு.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

பாராட்டுக்குரிய செயல்

ட்டுநர் உரிமம் பற்றிய புரிதலின்றி, உரிமம் இல்லாமலே வாகனம் ஓட்டும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிமம் பெற்றுத் தந்துகொண்டிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் எ.வீரமணியின் சிந்தனையும் செயலும் பாராட்டுக்குரியன. இவரது வழியைப் பின்பற்றி, ஏனைய போக்குவரத்துக் காவலர்களும், அதிகாரிகளும் செயல்படலாமே! இதனால் போக்குவரத்து விதி மீறல்களும், விபத்துகளும் குறைவதோடு காவல் துறையின் கடமை உணர்வும், செயல்பாடும் சீர்மைப்படும்தானே!

- கே.ராமநாதன், மதுரை.

எல்லை இல்லாப் பெருமை

மக்கு எல்லை இல்லாப் பெருமையைத் தென்னாட்டுத் தமிழன்.. பண்ணைபுரத்து ராசா சாதித்துக் காட்டியிருக்கிறார் (இந்திய இசையின் ராஜா). பத்ம விபூஷண் பெற்றவரின் வாழ்க்கை வரலாற்றை தமிழக அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். வளரும் தலைமுறைக்கு ராஜா போல் இசைத் துறையில் சாதிக்க வழிகாட்டியாக அவரது வரலாறு இருக்கும்.

- பொன்விழி, அன்னூர்.

சமூக ஜனநாயகம் உயர்ந்தது

‘இ

தற்குப் பெயர்தான் வெளிப்படையா?’, ‘ஜாதிகளை வளர்க்கிறதா ஜனநாயகம்?’ என்ற இரு கட்டுரைகளையும் படித்தேன். இரண்டும் சமூகத்தின் மீது அக்கறைகொண்டு எழுதப்பட்டவை. அம்பேத்கர் கருத்துப்படி, நாடாளுமன்ற ஜனநாயகம் சமூக ஜனநாயகத்தை நோக்கிச் செயல்பட்டு, சமூக ஜனநாயகம் என்பது சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் ஆகியவற்றை மக்கள் மத்தியில் உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்க வேண்டும்.

- க.கணேசன், கொட்டாரம்.

எப்போதும் தேவை பெரியார்

மூகம், அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பெரியார் ஆற்றிய பங்களிப்பைத் தெரிந்துகொள்ள அவரது கருத்துகள் அடங்கிய முழுத் தொகுப்பும் உதவுகிறது என்பதை ‘நூல்வெளி’யில் வெளியான ‘பெரியார் சொன்னால் ஏன் கோபம் வர வேண்டும்?’ என்ற விமர்சனக் கட்டுரையில் புவி தெளிவாக வெளிக்கொணர்ந்துள்ளார். பெரியாரின் பணி, அவர் வாழ்ந்த காலத்தில் எந்த அளவுக்குத் தேவைப்பட்டதோ அதைவிட அதிகமாக இப்போது தேவைப்படுகிறது. பகுத்தறிவுச் சிந்தனைகளும் அறிவியல் பார்வைகளுமே நமது நாட்டை இன்று உலக அளவில் உயர்த்திக் காட்டுவன என்பதை உணர வேண்டும்.

- மருதம் செல்வா, திருப்பூர்.

மூலிகை அறிவு

ஜனவரி 31 அன்று மூலிகைத் தாய் கட்டுரை படித்தேன். மீண்டும் பழைய உணவுமுறைக்கும், வைத்தியமுறைக்கும் தமிழ்ச் சமூகம் திரும்பிக்கொண்டிருக்கிற வேளையிது. ஏராளமான மூலிகைகள் இன்னும் நாம் அறியப்படாமலே உள்ளன. சாமியாத்தாள் போன்றவர்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊடகங்கள் இவர் திறமையையும், உழைப்பையும் உலகறியச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு இவருடைய மூலிகை அறிவு கொண்டுசெல்லப்பட வேண்டும்.

- ஆர்.இளங்கோ, சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்