இப்படிக்கு இவர்கள்: விவசாயிகளால் வாழும் நாடு!

By செய்திப்பிரிவு

விவசாயிகளால் வாழும் நாடு!

வே

ளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் தேசிய வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் (சிஏசிபி), சாகுபடிச் செலவினத்தை மட்டும் மாநில அரசுகள், வேளாண் பல்கலைக்கழகங்கள், புள்ளியியல் துறையினர் கொடுப்பதை வைத்து நிர்ணயிப்பது எந்தவிதத்தில் சரியானதாக இருக்கும்? சிஏசிபி-யைச் சுய அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றி, விவசாயிகள் கொடுக்கும் நேரடிப் பயிர் சாகுபடி செலவினத்தை ஏற்று அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். உற்பத்தியைப் பெருக்க, இயற்கையோடு இயைந்த புதிய தொழில்நுட்பம், இடைத்தரகர் இல்லா நேரடி விற்பனை, அரசு அறிவிக்கும் கொள்முதல் விலை சட்டப் பாதுகாப்புடன் பெற உறுதிசெய்யப்பட வேண்டும். இயற்கை மற்றும் நோய்த் தாக்குதலை ஈடுகட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் முழுப் பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும். ரூ.11 லட்சம் கோடிக் கடன் தள்ளுபடி, சற்று ஆறுதலாக இருந்தாலும், போதாது. இதனால், கடன் தீர்வும் ஆகாது; சொத்தாகவும் மாறாது. வாங்கிய கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பது எதனால், எப்படி என்பதை ஆராய்ந்து அறிந்து, நிரந்தரத் தீர்வுகாண முற்பட வேண்டும். வேளாண் கடன்களை முழுவதுமாகத் தள்ளுபடியே நன்மை பயக்கும். விவசாயிகளுக்குப் பேருதவியாக அரசு பல திட்டங்களை வகுத்து, அவர்களை வாழவைப்பதன் மூலம் இந்த நாட்டை வளம் பெற வைக்க முடியும்.

- கே.வி.ராஜ்குமார், தலைவர்,

தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் (சிஸ்ஃபா),

போளூர், திருவண்ணாமலை - தமிழ்நாடு.

மறந்த பெயர்.. மறக்காத சேவை!

பூ

மலூர் பள்ளி பற்றிய ஒரு சிறப்பான வரலாற்றை ‘ஒரு மர டேபிளும் 35 வீரர்களும்’ செய்தி (பிப்.6) நினைவுபடுத்தியது. அப்போது அங்கு ஒரு மாவட்டக் கழகத் தொடக்கப்பள்ளிதான் இருந்தது. அதன் தலைமையாசிரியர் தொடக்கக் கல்வி முடித்தவுடன், மாணவரை அருகில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்த்துவிடுவார். எட்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை திருப்பூரில் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிடுவார். அனைவரையும் கற்றவராக்கிய அவ்வாசிரியர், பிழைப்புக்காக அவ்வூர் வந்தவரே. பலரும் பட்டதாரிகளாக ஆனார்கள்.

கோவையின் புகழ்மிக்க காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பி.ஜி.விசுவநாதன் அவரிடம் பயின்றவரே. அங்கு கற்று கோவை டி.ஏ.இராமலிங்கம் செட்டியார் பள்ளியிலும் பின்னர், வாழைத்தோட்டத்து அய்யன் பள்ளியிலும் சிறந்த தலைமையாசிரியராகப் பணியாற்றிய கே.சுப்ரமணியம் என்னிடம் தெரிவித்தவையே இச்செய்தி. அந்த ஒப்பற்ற ஆசிரியர் பெயர் மறந்து போயிற்று. கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் ஆற்றும் பணியை வெளிப்படுத்தும் ‘தி இந்து’வின் சேவை போற்றுதற்குரியது.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

கேள்விக்குள்ளாகும் மாணவர்களின் எதிர்காலம்

கோ

வை பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த பணிகளுக்குப் பணியிடங்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்த செய்தி கவலையூட்டும் வகையில் உள்ளது. ஏராளமான எதிர்காலக் கனவுகளுடன் தரமான கல்வி கற்றிட கல்லூரியில் நுழையும் மாணவர்களுக்குத் தகுதியற்ற, பண பலத்தால் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியரால் கல்வி கற்பிக்க முற்படுவது ஒரு அநீதியான செயலாகும். மேலும், ஊழலால் உள்ளே நுழைந்த ஆசிரியரால் ஒழுக்கமான மாணவனை எப்படி உருவாக்க முடியும்? மாணவர்களின் எதிர்காலத்தைப் பொசுக்கிடும் இம்மாதிரியான செயல்கள் கல்வித் துறையில் நடப்பது கடும் கண்டனத்துக்குரியது.

- கே.ராமநாதன், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்